Breaking News

இறுதிப்போட்டியில் மும்பையுடன் மோதப்போவது சென்னை கிங்ஸா – பெங்களூர் ரோயல்ஸா

ஐ.பி.எல். கிரிக்­கெட்டில் இன்று ராஞ்­சியில் 2ஆவது தகுதி சுற்று ஆட்டம் நடக்­கி­றது.

இந்த போட்டி இரவு 8 மணிக்கு ஆரம்­ப­மா­கின்­றது. இதில் முதல் தகுதி சுற்று ஆட்­டத்தில் தோல்வி அடைந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், வெளி­யேற்­றுதல் ஆட்­டத்தில் வெற்றி பெற்ற பெங்­களூர் அணியும் மோது­கின்­றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்­டிக்கு தகுதி பெறும்.

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்­டி­யலில் முத­லி­டத்தை பிடித்து பிளே ஆப் சுற்­றுக்குள் நுழைந்­தது. ஆனால் முதல் தகுதி சுற்று ஆட்­டத்தில் மும்­பையுடன் தோற்­றது. இன்­னொரு வாய்ப்­பாக 2ஆவது தகுதி சுற்று ஆட்­டத்தில் பெங்­க­ளூ­ருடன் இன்று மோது­கி­றது. இதை பயன்­ப­டுத்தி கொள்­வது அவ­சியம்.

மும்­பைக்கு எதி­ராக சென்னையின் பந்து வீச்சு மோச­மாக இருந்­தது. அதை சரி செய்ய வேண்டும். மேலும் ஆரம்பத் துடுப்­பாட்டம் சிறப்­பாக இருக்க வேண்­டி­யது அவ­சியம். சுரேஷ் ரெய்னா அதி­ர­டியை வெளி­ப­டுத்­தினால் சென்னை அணிக்கு பலம் சேர்க்கும்.

கோஹ்லி தலை­மை­யி­லான பெங்­களூர் அணி 3ஆவது இடத்தை பிடித்­தது. அந்த அணி ராஜஸ்­தானை வீழ்த்­தி­யதால் மிகுந்த நம்­பிக்­கை­யுடன் இருக்­கி­றது. கிறிஸ்கெய்ல், டிவில்­லியர்ஸ் போன்ற அதி­ரடி வீரர்கள் அந்த அணியில் உள்­ளனர். மேலும் இளம் வீரர்கள் சிறப்­பாக விளை­யா­டு­கி­றார்கள்.

இதனால் சென்னை அணிக்கு எல்லா வகை­யிலும் பெங்களூர் கடும் சவால் கொடுக்கும். பெங்­க­ளூரை வீழ்த்த சென்னை அணி முழுத் திற­மையை வெளி­ப்ப­டுத்த வேண்டும். தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் போட்டி நடக்கிறது. இதனால் சென்னை அணிக்கு அதிகளவு ஆதரவு இருக்கும். சரி பொறுத்திருந்து பார்ப் போம் இந்தப்போட்டியில் ஜெயித்து இறுதிப்போட்டியில் மும்பையை எதிர் கொள்ளப்போவது யார் என்று.