மே -18 நினைவு தினம்! தமிழ்தேசிய மக்கள் முன்னணி உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்க அழைப்பு
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 06ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பகுதியிலும், வடக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் மேற்படி நினைவேந்தல் நிகழ்வுகளை எதிர்வரும் 18ம் திகதி காலை 11.00 மணியளவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பொது அமைப்புக்களும் இணைந்த வகையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.