Breaking News

மைத்திரி அணி ,மஹிந்த அணி என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் பாரிய பிளவு

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் பாரிய பிளவு ஏற்­ப­டு­வ­தற்­கான அறி­கு­றிகள் காணப்­ப­டு­வ­தா­கவும், வாய்ப்­புக்கள் அதி­க­ரித்­துள்ளதாகவும் குரு­ணாகல் நகரில் கடந்த வெள்­ளிக் கி­ழமை நடை­பெற்ற மஹிந்த அணியின் கூட்­டத்­தி­லி­ருந்து இது தெரிய வரு­வ­தா­கவும் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார்.

குரு­ணா­க­லையில் மஹிந்த ராஜ­பக்­ஷ­வுக்கு ஆத­ர­வாக நடத்­தப்­பட்ட கூட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியைச் சேர்ந்த 56 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கலந்து கொண்­டனர். இதில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை சேர்ந்­த­வர்­க­ளா­வார்கள். இப்­போது அக்­கட்சி மைத்­திரி தரப்பு, மஹிந்த தரப்பு என இரு கூறு­க­ளாகப் பிரிந்து காணப்­ப­டு­கின்­றது என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மைத்­திரி, மஹிந்த சந்­திப்­புக்கு பின்னர் நடை­பெற்ற குரு­ணா­கலை கூட்­டத்தில் பெருந்­தொ­கை­யான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 50 க்கும் மேற்­பட்ட மாகாண சபை உறுப்­பி­னர்­களும் கலந்து கொண்­டது அக்­கட்­சியின் பிளவு ஏற்­பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. அதே­வேளை, பொது ஜன ஐக்­கிய முன்­ன­ணியை மீண்டும் கட்­டி­யெ­ழுப்பி மஹிந்த ராஜ­பக்­சவை பிர­தமர் வேட்­பா­ள­ராக அறி­விக்­கவும் இட­முள்­ளது. இச்­சந்­தர்ப்­பத்தில் லங்கா சம­ச­மா­ஜக்­கட்சி யாருடன் இணைந்து போட்­டி­யி­டு­வது என்­பது குறித்து தீர்­மா­னிக்கும் என்றார்.

இதே­வேளை, பொதுத் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறு அர­சிற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் தரப்பு தீர்­மா­னித்­துள்­ள­தாக அர­சியல் வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன. இதன்­படி எதிர்­கா­லத்தில் நடத்­தப்­படும் கூட்­டங்கள் மற்றும் ஆர்ப்­பாட்­டங்­களின் போது இந்த கோரிக்­கையை அர­சிற்கு முன்­வைக்க அவர்கள் எதிர்­பார்த்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் 15ஆம் திகதி உரிய காலம் முடி­வ­டைந்த உள்­ளூ­ராட்சி சபை­களில் காலத்தை நீடிக்­கும்­படி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் இடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது மஹிந்த தரப்பு கோரிக்கை விடுத்த போதும் ஜனா­தி­பதி அதற்கு இணக்கம் தெரி­விக்­க­வில்லை.

புதிய தேர்தல் முறை உள்­ள­டக்­கப்­பட்ட இரு­ப­தா­வது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றிய பின்னர் சில மாதங்­களில் பொது தேர்­தலை நடத்த அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தாகத் தெரிய வரு­கின்­றது.

இது இவ்­வா­றி­ருக்க, புதிய தேர்தல் முறை உள்­ள­டக்­கப்­பட்ட 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்த சட்­ட­மூலம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் இவ்­வார இறு­தியில் வெளி­யி­டப்­ப­டப்­ப­ட­வுள்­ளது. புதிய தேர்தல் முறை குறித்து சிறு­கட்­சி­களின் கருத்­துகள் மற்றும் ஆலோ­ச­னை­களை முன்­வைக்க ஒரு வார கால அவ­காசம் வழங்­கப்­பட்­ட­துடன், அந்த சட்­ட­மூலம் எதிர்­வரும் 13ஆம் திகதி அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­ச­ர­வையின் அனு­ம­தியின் பின்னர் மேற்­படி சட்­ட­மூலம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்டு எதிர்­வரும் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

புதிய தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 லிருந்து 265 ஆக அதிகரிக்கப்படவுள்ளது. 165 உறுப்பினர்கள் தொகுதி முறையின் கீழும் 31 உறுப்பினர்கள் மாவட்ட விகிதாசார முறையின் கீழும் 59 உறுப்பினர்கள் தேசிய விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.