ஜெயலலிதாவை மீண்டும் பதவி இழக்கச் செய்வேன்! சுப்ரமணியன் சுவாமி சூளுரை
உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து ஜெயலலிதாவின் முதல்வர் பதவியை மீண்டும் இழக்கச் செய்வேன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய உள்ளேன். எனவே, ஜெயலலிதா முதல்வரானாலும் மீண்டும் தனது பதவியை அவர் இழக்க வேண்டிவரும் என்றார் .