Breaking News

கடற்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள எமது காணி­களை மீட்­டுத்­தா­ருங்கள்! சிறிதரனிடம் மக்கள் வேண்டுகோள்

யாழ். மண்­டை­தீவில் கடற்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்ள பொது­மக்­களின் 25 ஏக்கர் தோட்டக் காணி­களை மீட்­டுத்­த­ரு­மாறு பாதிக்­கப்­பட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறி­த­ர­னிடம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.


பொது­மக்­களின் அழைப்பின் பேரில் நேற்று முன்­தினம் மண்­டை­தீ­வுக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சி.சிறிதரன் சென்­றி­ருந்த போதே இக்­கோ­ரிக்­கையை முன்­வைத்­துள்­ளனர்.

இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்கம் வட மாகா­ணத்தில் படை­யினர் ஆக்­கி­ர­மித்­தி­ருக்கும் மக்­களின் காணி­களை படிப்­ப­டி­யாக விடு­வித்து வரு­கின்­றது. இந்­நி­லையில் மண்­டை­தீவில் கடற்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்­தி­ருக்கும் காணிகள் குறித்து அர­சாங்­கத்தின் கவ­னத்­துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிறிதரன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அப்­பி­ர­தேச மக்கள் வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

மண்­டை­தீவு முத்­து­மாரி அம்மன் கோயிலை அண்­டிய பகு­தியில் கடற்­க­ரைக்கு அண்­மை­யாக பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான 18 ஏக்கர் செம்­பாட்டு தோட்டக் காணி­களும், 7 ஏக்கர் கடற்­கரை காணி­க­ளு­மாக பொது­மக்­களின் 25 ஏக்கர் காணி­களை கடற்­ப­டை­யினர் ஆக்­கி­ர­மித்து வைத்­துள்­ளனர். இந்­நிலையில் கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் குறித்த பகு­தியை சுவீ­க­ரிப்­ப­தற்­கான பிரிவு 2 பிர­சுரம் வெளியா­கி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்து இந்த காணி­களை தம்­மி­டமே தரு­மாறு கோரி 20 காணி உரி­மை­யா­ளர்கள் கிரா­ம­சே­வகர் ஊடாக பிர­தேச செய­ல­ருக்கு கடி­தங்­க­ளுடன் தமது காணி­க­ளுக்­கான உறுதிப் பத்­தி­ரங்கள் பிர­தி­க­ளையும் இணைத்து அனுப்­பி­யி­ருந்­தனர். எனினும் இதற்கு இது­வரை எந்தப் பதிலும் கிடைக்­க­வில்லை. இது தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுத்து கடற்­ப­டை­யி­ட­மி­ருந்து எமது காணி­களை விடு­வித்துத் தாருங்கள் என மக்கள் கோரி­யுள்­ளனர்.

அர­சாங்­கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்­புக்கள் மற்றும் மீள்­கு­டி­யேற்ற அமைச்­ச­ருடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி குறித்த விடயம் தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்பதாகவும் காணி ஆக்கிரமிப்பு விடயத்தில் மக்கள் தொடர்ந்தும் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதுடன் எந்த காரணத்துக்காகவும் காணிகளை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மக்களிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.