புங்குடுதீவு மாணவி கொலைக்கு குடும்பப் பகையே காரணம் என்கிறது பொலிஸ்
குடும்பப் பகையே புங்குடுதீவு மாணவி வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்னர்.
புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவியின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்தனர். அவர்கள் மூவரும் மாணவியின் உறவினர்கள் ஆவர். பொலிஸாரின் விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்தன என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது மேற்படி தகவலை நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.