Breaking News

கைதிகள் விடு­தலை தொடர்பில் நல்ல செய்­தியை எதிர்பார்க்­க­லாம்! சுமந்­திரன் எம்.பி.கூ­று­கின்­றார்

சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்­து வ­தா­கவும் வெகு விரைவில் நல்ல செய்­தியை எதிர்­பார்க்­கலாம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. 

கைதிகள் தொடர்பான அறிக்­கையை வெகு­வி­ரைவில் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­ பித்து கைதி­களை விடு­விக்க முடியும் என வும் கூட்­ட­மைப்பு குறிப்­பிட்­டுள்­ளது.

நீண்­ட­கா­ல­மாக சிறைச்­சா­லை­களில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­த­லைக்­கான நட­வ­டிக்­கைகள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பி­னரால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் அது தொடர்பில் தற்­போ­தைய நிலைப்­பாட்­டினை வின­வி­ய­போதே கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நாம் தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கின்றோம். கைது செய்­யப்­பட்டு சிறையில் இருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் பலர் எவ்­வித குற்­றச்­சாட்டும் இல்­லாது சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவார். அதேபோல் சாதா­ரண குற்­றச்­சாட்டில் சிலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்கள் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் நாம் கடந்த காலங்­களில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தோம். 

பல சந்­தர்­பங்­களில் நாம் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் அர­சாங்­கத்­திடம் கார­ணங்கள் முன்­வைத்­துள்ளோம். அதற்கு அமை­யவே கடந்த காலத்தில் கைது செய்­யப்­பட்டு சிறையில் உள்ள தமிழ் கைதி­களின் தக­வல்­களை சேக­ரித்து ஆவ­ணப்­ப­டுத்­தி­யுள்ளோம். கைதி­களின் விப­ரங்கள் தொடர்பில் உண்­மை­யான தக­வல்கள் இருக்கும் சந்­தர்ப்­பத்தில் அவர்கள் விடு­தலை செய்­வ­தற்­கான சந்­தர்­பங்கள் அதி­க­மா­கவே உள்­ளது. எனவே எமது முயற்­சியை நாம் கைவி­டப்­போ­வ­தில்லை.

மேலும் இக் கைதி­களின் விடு­தலை தொடர்பில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவுடன் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். எனினும் நீதி­ய­மைச்சர் தற்­போது இலங்­கையில் இல்­லாத கார­ணத்­தினால் அவர் நாடு திரும்­பி­ய­வுடன் அவரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­துவோம். 

அத்­தோடு நாம் சேக­ரித்­துள்ள கைதி­களின் விப­ரங்கள் தொடர்­பிலும் அவ­ருடன் பேச்­சு­வார்த்தை நடத்தி அதன்­பின்னர் அமைச்­ச­ர­வையில் சமர்க்­க­வுள்ளோம். எப்படியேனும் வெகு விரைவில் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல செய்தியை எதிர்ப்பார்க்க முடியும். கைதிகளின் விடுதலை தொடர்பில் அனைத்து முயற்சிகளையும் கூட்டமைப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.