Breaking News

காணாமல்போன ஊடகவியலாளர்கள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க ஆணைக்குழு


ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொலை­செய்­யப்­பட்ட, காணா­மல்­போன யுகம் தற்­போது இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­சிங்க கொலை­செய்­யப்­பட்ட, காண­மல்­போன ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஆணைக்­கு­ழு­வொன்றை அமைப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்

வெகு­சன ஊடக சீர்­தி­ருத்­தங்­கள் தொடர்­பான இரண்டு நாள் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்­லூரி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இறுதி நாளான நேற்­றை­ய­தினம் அம்­மா­நாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நாம் தற்­போது 2015ஆம் ஆண்­டுக்­கான வெகு­சன ஊடக அபி­வி­ருத்தி பற்­றிய மக்கள் அறி­விப்பில் கைச்­சாத்­திட்­டி­ருக்­கின்றோம். இலங்­கையில் வெகு­சன ஊடகம் மீண்டும் சுதந்­தி­ர­மான சூழலை அடைந்­தி­ருக்­கின்­றது என்ற இலக்கை அடை­வ­தற்­கான விசேட கட்­ட­மைப்­பொன்­றா­கவே அதனைக் கரு­து­கின்றோம். அத்­துடன் சர்­வ­தேச ஊடக வல்­லு­னர்­களின் அறிக்­கை­யொன்றும் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. கடந்த காலத்தில் ஊடகங்­க­ளுக்கு மிக நெருக்­க­டி­யான நிலை­மைகள் காணப்­பட்­டன. சில ஊடகங்க நிறு­வ­னங்­க­ளுக்கு பாரிய அழுத்­தங்கள் அளிக்­கப்­பட்­டன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறை­களில் அடைக்­கப்­பட்­டனர். நாட்டை விட்டு வெளியே­றினர். லசந்த விக்­கி­ர­ம­துங்க போன்ற ஊட­க­வி­யலா­ளர்கள் கொல்­லப்­பட்­டார்கள். பிரகீத் எக்­னெ­லிய கொட போன்­ற­வர்கள் காணாமல் போனார்கள். ஊடக நிறு­வ­னங்கள் தாக்­கப்­பட்­டன.

இன்று அந்த யுகம் இல்­லா­து­போ­யுள்­ளது. தற்­போது ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­விப்­பி­ர­மாணம் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்தே அந்த மாற்றம் நிகழ்ந்­துள்­ளது. நல்­லாட்­சியில் வெள்ளைவேன் இல்லை, அர­சாங்க அழுத்­த­மில்லை ஊடக நிறு­வ­னங்கள் தாக்­கப்­ப­டு­வ­தில்லை, என்­பதால் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு கிடைத்து விடாது. அனை­வரும் ஒன்று பட்டு எவ்­வாறு ஒரு கட்­ட­மைப்பு ரீதி­யான தீர்வை உரு­வாக்­கு­வது என்­பது தொடர்பில் முடி­வுக்கு வர­வேண்டும்.

அர­சாங்கம் ஊடக சீர்­தி­ருத்தம் தொடர்பில் எடுத்­துள்ள விட­யங்கள் எதிர்­கா­லத்தில் எடுக்­க­வுள்ள விட­யங்கள் தொடர்­பாக நேற்று முன்­தினம் இங்­குள்ள சர்­வ­தேச ஊடக வல்­லுநர் குழு­வி­ன­ருடன் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்தும் போது கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். அதன்­போது முக்­கிய தீர்­மா­ன­மொன்றை எடுத்­தி­ருந்தோம்.

அதா­வது, கொலை­செய்­யப்­பட்ட, காணா­மல்­போன ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு ஊட­க­வி­ய­லா­ளர்கள், சிவில் சமூ­கத்­தி­ன­ருடன் கலந்­து­ரை­யாடி ஆணைக்­கு­ழு­வொன்றை அமைப்­ப­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். தற்­போது காணா­மல்­போன, கொலை செய்­யப்­பட்ட ஊட­க­விய­லா­ளர்கள் தொடர்­பான எழுத்­து­மூ­ல­மான முறைப்­பா­டு­களை முன்­வைக்கும் பட்­சத்தில் அவ்­வா­றான செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­படும்.

வெகு­சன ஊடகம் தொடர்­பாக அர­சாங்­கத்­திற்கு, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பொறுப்­பு­ணர்வு காணப்­ப­டு­கின்­றன. அவை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவா என்­பது தொடர்பில் கவனம் செலுத்­தப்­ப­ட­வேண்டும். அதே­போன்று ஊடகங்­களின் பாது­காப்பு தொடர்­பான அவ­தானம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் தொழில் சார் நிபு­ணத்­துவம் வாய்ந்த ஊடக­க்கல்வி முறை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும். 

ஆகவே அவை தொடர்­பாக காணப்­படும் பிரச்­சி­னைக்கு தீர்­வ­ளிக்­கப்­பட்டு அச்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரத மரான நான் மற்றும் எமது அமைச்சரவை பரிபூரணமான ஆதரவளிப்பதற்கு தயாராக உள்ளோம் என்பதை இவ்விடத்தில் தெரிவித் துக்கொள்கின்றேன் என்றார். அதேநேரம் எதிர்க்கட்சித்தலைவரும் நண் பருமான நிமல் சிறிபால டி சில்வா ஊடக வியலாளர்கள் தொடர்பாக முன்வைத்த சில குறைபாடுகள் தொடர்பிலான கருத்துக் களை நான் ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் சுட்டிக்காட்டினார்.