Breaking News

பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு முன் ஐ.ம.சு.மு.வின் ஆட்­சியை உரு­வாக்­கு­வோம் - நிமால்

பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தற்கு முன்பு ஐக்­கிய மக்கள்சுதந்­திர முன்­னணி ஆட்­சியை உரு­வாக்­குவோம். அதே போல் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க­ விற்கு எதி­ராக விரைவில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வருவோம் என எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா எச்­ச­ரித்தார்.

அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவை நிய­மிப்­பதே எமது தனிப்­பட்ட நிலைப்­பாடு இது தொடர்பில் உரிய நேரத்தில் மக்­களின் தேவைக்­கேற்ற முடி­வினை எடுப்போம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

எமது பெரும்­பான்மை பலத்தை உரிய நேரத்தில் காண்­பிப்போம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். எதிர்க்­கட்சி தலைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே எதிர்க்­கட்சி தலைவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டிற்கு ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுசில் பிரே­ம­ஜ­யந்த, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான வீர­கு­மார திஸா­நா­யக்க, பிரபா கணேசன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது எதிர்க்­கட்சி தலைவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

எதிர்­வரும் மூன்றாம் திகதி அர­சி­ய­ல­மைப்பு பேர­வையை உரு­வாக்கும் நோக்­குடன் பாரா­ளு­மன்றம் கூட­வுள்­ளது. இதன்­போது அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்­கான சிவில் உறுப்­பி­னர்­களை நிய­மிப்­ப­தற்கு பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் தேவைப்­ப­டு­கி­றது. சிவில் உறுப்­பி­னர்­க­ளுக்கு பாரா­ளு­மன்றம் அங்­கி­காரம் கிடைக்­கப்­பெற்றால் எதிர்­வரும் நான்காம் திக­தி­யி­லி­ருந்து அர­சி­ய­ல­மைப்பு பேரவை தனது கட­மையை உரிய வகையில் முன்­னெ­டுக்கும். அர­சி­ய­ல­மைப்பு பேரவை உறுப்­பி­னர்கள் தெரிவு தொடர்பில் பிர­த­ம­ருக்கும் எமக்கும் இடையில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது. 20 ஆவது திருத்தம் 100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆகவே தேர்தல் முறை­மையை உள்­ள­டக்­கிய 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­றியே தீர­வேண்டும்.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­திற்கு எதிர்க்­கட்சி என்ற வகையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பூரண ஆத­ர­வினை நல்கும். அமைச்­ச­ரவை கூட்­டத்தில் சிறுப்­பான்மை அர­சியல் கட்­சி­களின் நிலைப்­பா­டு­க­ளினால் இணக்­கப்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. எவ்­வா­றா­யினும் இந்த விட­யத்தில் எமக்கு இணக்­கப்­பாட்­டுக்கு வர­மு­டியும்.

மக்­களின் அபிப்பி­ரா­யத்தின் பிர­காரம் 20 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றியே ஆக­வேண்டும். நம்­பிக்கையில்லா பிரே­ரணை இதே­வேளை அச­ராங்­கத்தின் பிர­தி­நி­திகள் மீது நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வரும் விட­யத்தில் மக்­களின் அவ­தானம் திரும்­பி­யுள்­ளது.

இதன்­பி­ர­காரம் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எதிர்­வரும் 9 ஆம் திகதி கொண்டு வர திட்­ட­மிட்ட போதிலும் இதற்கு அர­சாங்கம் இடம் வழங்­க­வில்லை. எவ்­வா­றா­யினும் அமைச்சர் ரவி கரு­ணா­நாயக்க் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஜூன் மாதத்தில் கொண்டு வரு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்போம்.

அதே­போன்று மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜூன மகேந்­திரன் ,இலஞ்ச ஊழல் விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் தலைவர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர திட்­ட­மிட்­டுள்ளோம்.

இதே­வேளை தற்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் மீது மக்­களின் ்நம்பிக்கை இழந்­துள்­ளது். இந்த ஆட்­சியில் இனி­மேலும் நல்­லாட்­சியை எதிர்ப்­பார்க்க முடி­யாது. ஆகையால் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வருவோம். ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியே இந்த தீர்­மா­னத்தை எடுத்­தது. ஆகவே குறித்த யோச­னைக்கு கையொப்பம் இடப்­பட்டு வரு­கி­றது. நானும் கையொப்­ப­மி­டுவேன்.

எனினும் அர­சி­ய­ல­மைப்பின் 20 அவது திருத்­தச்­சட்­டத்­திற்கு் எந்த காரணம் கொண்டும் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில ்பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ரப்­படும். இது குறித்து ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி கட்­சித்­த­லை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய பின்பு தீர்­மானம் எடுக்­கப்­படும்.

எனினும் பாரா­ளு­மன்ற நிகழ்ச்சி நிரலின் பிர­கா­ரமே குறித்த விட­யங்கள் விவா­தத்­திற்கு எடுக்­கப்­படும். எனினும் இதன்­கா­ர­ண­மாக பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட மாட்­டாது. அதற்­கான முடி­வினை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே எடுப்பார். இதன்­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் பல்­வேறு கேள்­வி­களை எதிர்க்­கட்சி தலை­வ­ரிடம் தொடுத்­தனர்.

கேள்வி்: பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்­பி­லான தீர்­மா­னத்­திற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடு என்ன?

இந்த கேள்விக்கு ஐ.ம.சு.மு பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த பதில் அளிக்கையில்,

இதற்கு எதிராக ஜனாதிபதியினால் ஒன்றும் செய்யமுடியாது. எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையில் எமது தீர்மானத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். எனினும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். எமது பெரும்பான்மை பலத்தை உரிய நேரத்தில் காண்பிப்போம் என்றார்.