அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதாக பிரதமர் எவ்வாறு கூற முடியும்? -ராஜித கேள்வி
தகவல் அறியும் சட்டமூலமும் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையும் தற்போதைய பாராளுமன்ற காலத்திலேயே நிறைவேற்றப்படும். அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் எவ்வாறு கூற முடியும்? என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன கேள்வியெழுப்பினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
தகவல் அறியும் சட்டமூலமும் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையும் தற்போதைய பாராளுமன்ற காலத்திலேயே நிறைவேற்றப்படும். இந்த இரண்டு சட்ட மூலங்களும் தயாரிக்கப்பட்டுவிட்டன. அவற்றை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவோம்.
கேள்வி: தகவல் அறியும் சட்டமூலமும் மக் கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையும் அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் என்று பிரதமர் கூறியுள்ளாரே?
பதில்: அடுத்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று பிரதமர் எவ்வாறு கூறமுடியும்? இவை 100 நாள் வேலைத்திட்டத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்களாகும். அவற்றை அவ்வாறு பிற்போட முடியாது. எனவே தகவல் அறியும் சட்டமூலமும் மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒழுக்கக்கோவையும் தற்போதைய பாராளுமன்ற காலத்திலேயே நிறைவேற்றப்படும். அதில் எந்த சிக்கலும் இல்லை.
கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களை கலைக் கும் தீர்மானத்துக்கு அமைச்சரவையில் சுதந் திரக் கட்சி எதிர்ப்பு வெளியிடவில்லையா?
பதில்: மிகப்பெரிய விவகாரமாக எடுக்கப்படவில்லை.
கேள்வி: எதிர்க்கட்சித் தலைவர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்படுவதை எதிர்த்திருந்தாரே?
பதில்: அவர் அமைச்சரவையில் இல்லையே.
கேள்வி: தனது கட்சியின் அமைச்சர்கள் ஊடாக எதிர்க்கவில்லையா?
பதில்: இல்லை.
கேள்வி: உள்ளூராட்சி மன்றங்களை கலைக் கும் தீர்மானத்துக்கு சுதந்திரக் கட்சி ஏன் எதிர்ப்பு வெளியிடுகின்றது?
பதில்: அவர்களின் அதிகாரத்தில் இருப்ப தால் எதிர்க்கின்றனர் போன்று தெரிகின்றது.