Breaking News

மஹிந்தவின் மீள் பிரவேசம் சாத்தியமாகுமா? அரசியல் தீப்பொறி

சர்­வா­தி­கார ஆட்­சி­ய­யொன்­றுக்கு எதி­ராக அல்­லது சர்­வா­தி­கா­ரத்தை
நோக்­கிய பாதையில் பய­ணிக்­கின்ற ஓர் ஆட்­சிக்கு எதி­ராக மக்கள் பல நாடு­களில் வன்­முறை வழி­யி­லான ஆயுதப் புரட்­சியின் மூலமே, நல்­லாட்­சியை மலரச் செய்­தி­ருக்­கின்றார் கள். ஆனால் இலங்­கையில் மஹிந்த ராஜ பக்ஷவின் சர்­வா­தி­கார போக்­கி­லான ஆட் ­சியை ஜன­நா­யகப் புரட்­சி­யொன்றின் மூலமே மக்கள் நல்­லாட்­சியை மலரச் செய்­தி­ருக்­கின்­றார்கள் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித் துள்ளார்.

இன்று பல­ராலும் பல நாடு­க­ளி­னாலும் பேசப்­ப­டு­கின்ற இந்த வெற்றி, அர­சியல் செயற்­திறன் மிக்க திட்­ட­மி­ட­லுக்கு கிடைத்த வெற்­றி­யாகும். இது எந்­த­வொரு அர­சியல் கட்­சிக்கும் கிடைத்த வெற்­றி­யல்ல என்றும் மங்­கள சம­ர­வீர கூறி­யி­ருக்­கின்றார்.

இந்த வருடம் ஜன­வரி மாதம் அப்­போது பத­வியில் இருந்த முன்­னைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மூன்­றா­வது முறை­யா­கவும் ஜனா­தி­ப­தி­யாகப் பத­வியைக் கைப்­பற்­று­வ­தற்­காக நடத்­திய ஜனா­தி­பதி தேர்­தலே இத்­த­கைய ஆட்சி மாற்­றத்­திற்கு வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்­தது. தனது பத­விக்­காலம் முடி­வ­டை­வ­தற்கு முன்­ன­தா­கவே, இந்தத் தேர்­தலை அவர் நடத்­தி­யி­ருந்தார். இதன் மூலம் நாட்டில் நல்­லாட்சி ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு ஏற்­பட்­டி­ருந்­தது. இந்தச் செய்­கையின் மூலம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தனது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்­டுக்­கொண்டார் என்றும் தேர்தல் முடிந்த கையோடு பலர் விமர்­சனம் செய்­தி­ருந்­தார்கள்.

அர­சியல் சதி­யொன்றின் மூலமே தன்னை எதி­ர­ணி­யினர் தேர்­தலில் தோற்­க­டித்­தி­ருந்­தனர் என்றும், தமிழ் மக்­களும் முஸ்லிம் மக்­களும் திட்­ட­மிட்ட வகையில் தனக்கு எதி­ராக வாக்­க­ளித்து, தன்னைத் தோல்­வி­யுறச் செய்­த­தா­கவும், பல­வா­றாக அவர் கார­ணங்­களைத் தெரி­வித்­தி­ருந்தார்.

முடி சூடா மன்­ன­னாக நிக­ரில்­லாத நிறை­வேற்று அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக அரி­ய­ணையில் வீற்­றி­ருந்த மஹிந்த ராஜ­பக்ஷ இவ்­வாறு தேர்­தலில் தோல்­வியைத் தழுவ நேரிடும் என்று ஒரு போதும் எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. ஆட்சி மாற்­றத்தின் பின்னர், கடந்த ஆட்­சியில் இடம்­பெற்­றி­ருந்த ஊழல்கள், மிகவும் பாரிய நிதி­மோ­ச­டிகள் பற்­றிய தக­வல்கள் வெளி­வந்த வண்ணம் இருக்­கின்­றன.

இவ்­வா­றா­ன­தொரு சூழ­லில்தான், மீண் டும் அர­சி­ய­லுக்குள் வரு­வ­தற்­கான முயற்­சி­களில் மஹிந்த ராஜபக்ஷ ஈடு­பட்­டி­ருக்­கின்றார். ஆட்சி மாற்றம் ஏற்­பட்­ட­வுடன் தனது ஆத­ர­வா­ளர்­களின் ஊடாக தனது அர­சியல் மீள் பிர­வே­சத்தை வெளிப்­ப­டுத்­திய அவர், இப்­போது நேர­டி­யாக தனது நோக்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

முன்னாள் ஜனா­தி­ப­தி­யா­கிய மஹிந்த ராஜ­பக் ஷவுக்கும், புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் நடை­பெற்ற உயர் மட்டச் சந்­திப்பு ஒன்றில் வரப்­போ­கின்ற பொதுத் தேர்­தலில் பிர­தமர் பத­விக்­கான வேட்­பா­ள­ராகத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது பற்றி அவர் தான் சார்ந்த கட்­சியின் தலை­வ­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் பேச்­சுக்கள் நடத்­தி­யி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி தேர்­தலில் மட்­டுமே ஜனா­தி­பதி பத­விக்­கான வேட்­பா­ளர்­க­ளாக, வேட்­பா­ளர்கள் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது வழக் கம். ஆனால் பிர­தமர் பத­விக்­கென குறிப்­ பிட்டு வேட்­பா­ளர்கள் தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்ற நடை­முறை நாட்டில் இல்லை என்­பதை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சுட்­டிக்­காட்டி, மஹிந்த ராஜ­பக்­ஷவின் கோரிக்­கையைப் புறந்­தள்­ளி­யுள்­ள­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்றன. அதே­வேளை, இந்தக் கோரிக்­கையை சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுவில் ஆரா­யலாம் என்றும் கட்­சியின் தலை­வ­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ள­தாக இந்தச் சந்­திப்பு குறித்த தக­வல்­களை செய்­தி­யா­ளர்­க­ளுக்கு வெளி­யிட்ட அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யுள்ளார்.

சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்னாள் தலை­வ­ராக இருந்து ஜனா­தி­பதி பத­வியை மஹிந்த ராஜ­பக்ஷ வகித்­தி­ருந்தார். அதே­போன்று அந்தக் கட்­சியின் தலை­வ­ரா­கவும் நாட்டின் ஜனா­தி­ப­தி­யா­கவும் இப்­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன இருக்­கின்றார். புரட்­சி­க­ர­மான தேர்தல் என்று வர்­ணிக்­கப்­ப­டு­கின்ற ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­வரும், வெற்றி பெற்­ற­வ­ரு­மா­கிய - அவர்கள் இரு­வரும் நேருக்கு நேர் சந்­தித்­ததும், அர­சியல் விட­யங்கள் தொடர்­பாக பேச்­சுக்கள் நடத்­தி­யதும் முக்­கிய விட­ய­மாகக் கரு­தப்­ப­டு­கின்­றது.

அதுமட்­டு­மல்­லாமல், சர்­வா­தி­காரப் போக்­ குடன் ஊழல்கள் மலிந்த ஆட்­சியை நடத்­தி­ய­வரும், தேர்­தலில் தோல்­வி­கண்­ட­வ­ரு­மா­கிய ஒரு­வ­ருடன் புதிய ஜனா­தி­பதி பேச்­சுக்கள் நடத்­தி­யது பொருத்­த­மா­ன­தல்ல என்ற ஒரு கருத்தும் நில­வு­கின்­றது. இவ்­வா­றான சந்­திப்பும் அர­சியல் விட­யங்கள் தொடர்­பாக நடத்­தப்­பட்ட பேச்­சு­வார்த்­தை­களும், முன்­னைய ஜனா­தி­ப­தியை அர­சி­ய­லுக்குள் அனு­ம­தித்து, நாட்டில் மீண்டும் பழைய அர­சியல் நிலைமை ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பை உரு­வாக்கிக் கொடுக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவும் சிலர் சந்­தேகம் வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள்.

மஹிந்த ராஜபக் ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக்­கு­வது, கலைக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளூராட்சி மன்­றங்­களின் காலத்தை நீடிப்­பது, புதிய ஆட்­சியில் பல­வீ­ன­ம­டைந்­துள்ள ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை அர­சியல் ரீதி­யாகப் பலப்­ப­டுத்­து­வது, பொதுத் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்யும் குழுவில் மஹிந்த அணி­யி­ன­ரை யும் பிர­தி­நி­தி­க­ளாக உள்­வாங்­கு­வது, ஊழல் இலஞ்சம் மோசடி குறித்து விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிதிக்­குற்றப் புல­னாய்வு பிரிவின் செயற்­பா­டுகள் குறித்து ஆராய்­வது ஆகிய விட­யங்கள் குறித்து இந்தச் சந்­திப்பில் பேச்­சுக்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன.

இந்த விட­யங்கள் யாவுமே சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்­தவின் கைகளை அர­சி­யல் ரீதி­யாக ஓங்கச் செய் ­வ­தற்­கான ஒரே நோக்­கத்தை இலக்­காகக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பது தெளி­வாகத் தெரி­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்­தலில் பெரும்­பான்மை பலத்தைப் பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும், முன்னாள் ஜனா­தி­ப­தி­யா­கிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு கணி­ச­மான மக்கள் வாக்­க­ளித்­தி­ருந்­ததன் மூலம், சிங்­கள மக்கள் மத்­தியில் அவ­ருக்கு அர­சியல் ரீதி­யாக ஆத­ரவு இருக்­கின்­றது என்­பதை புதிய ஜனா­தி­பதி கருத்திற் கொண்டு, அந்த மக்­க­ளு­டைய வெறுப்பைச் சந்­திக்கத் தக்க காரி­யங்­களைச் செய்யக் கூடாது என்­ப­தற்­கா­கவே, இந்தச் சந்­திப்­பிற்கு அவர் உடன்­பட்­டி­ருந்தார் என்று கரு­தப்­ப­டு­கின்­றது.

மஹிந்த ராஜபக்ஷ சர்­வா­தி­காரப் போக் கைக் கொண்­டி­ருந்தார். நாட்டின் வளங்­களைச் சுரண்டி ஊழல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இட­ம­ளித்­தி­ருந்தார் என்ற பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் இருந்த போதிலும், அவர் மீது வெறுப்பைக் காட்டி அல்­லது அவரை வெளிப்­ப­டை­யா­னதோர் அர­சியல் எதி­ரி­யாக உரு­வ­கப்­ப­டுத்தி அவ­ரு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளான சிங்­கள மக்­களின் அர­சியல் ரீதி­யான ஆத­ரவை நிரந்­த­ர­மாக இழப்­ப­தற்­கு­ரிய வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­விடக் கூடாது என்­ப­தற்­காக, இந்த விட­யத்தில் அவர் நிதா­ன­மாகச் சிந்­தித்துச் செயற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் தென்­னி­லங்கை விமர்­ச­கர்கள் கரு­து­கின்­றார்கள்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக்ஷ மீண் டும் அர­சி­ய­லுக்குள் பிர­வே­சித்து கோலோச் ­சு­வ­தற்­கான சந்­தர்ப்­பத்தை அறவே இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவே முக்­கி­யமாக 19 ஆவது அர­சியல் திருத்­தத்தை மைத்­தி­ரி­பால சிறி­சேன கொண்டு வந்து நிறை­வேற்­றி­ய­தா­கவும் அர­சியல் அவ­தா­னிகள் சிலர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். ஆயினும் மஹிந்த ராஜபக்ஷ மட்­டு­மல்ல, அப­ரி­மி­த­மான அதி­கா­ரங்­களைக் கொண்­ட­தாக மஹிந்த ராஜபக்ஷவினால் 18 ஆவது அர­சியல் திருத்­தத்தின் மூலம் மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி பத­விக்கு வரு­கின்ற எவரும் அந்த அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி நாட்டில் சர்­வா­தி­கார ஆட்சிப் போக்கை இனிமேல் எந்­தக்­கா­லத்­திலும் உரு­வாக்­கி­விடக் கூடாது என்­ப­தற்­கா­கவே 19 ஆவது திருத்­தத்தை அவர் கொண்டு வந்­துள்ளார் என்று பலரும் கரு­து­கின்­றார் கள்.

நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்று, அந்த அதி­கா­ரங்­களை, மஹிந்த ராஜபக்ஷவைப் போன்று சுய அர­சியல் இலா­பத்­திற்­காகப் பயன்­ப­டுத்­தாமல், அந்த அதி­கா­ரங்­களைக் குறைப்­ப­தற்­கா­கவே மைத்­தி­ரி­பால சிறி­சேன பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார். இதற்குச் சான்­றாக 19 ஆவது அர­சியல் திருத்தச் சட்டம் ஆதா­ர­மாகத் திகழ்­கின்­றது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தி­களைக் கட்­டாயம் நிறை­வேற்­றுவேன் என்று சூளு­ரைத்­துள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன, அந்த மக்­களின் தீர்ப்­புக்கு விரோ­த­மாக ஒரு­போதும் செயற்­ப­ட­மாட்டேன் என்றும் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கின்றார்.

இதனை உறு­திப்­ப­டுத்தும் வகை­யிலேயே மஹிந்த ராஜபக்ஷவு­ட­னான சந்­திப்பில் பேசப்­பட்ட விட­யங்­க­ளுக்கு அவர் உடன்­ப­ட­வில்லை என்றும், அந்தப் பேச்­சுக்கள் பல­னின்றி முடி­வ­டைந்­துள்­ளன என்றும் அவ­தா­னிகள் கரு­து­கின்­றார்கள். அது மட்­டு­மல்­லாமல் பிர­தமர் வேட்­பா­ள­ராக மஹிந்த களம் இறங்­கு­வ­தற்கு உடன்­ப­டாத மைத்­தி­ரி­பால சிறி­சேன, அந்த விட­யத்தைக் கட்சி யின் மத்­திய குழுவின் ஊடாக நிரந்­த­ர­மாக நிரா­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருக்­கின்றார் என்று ஊகம் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

நாட்டில் நல்­லாட்­சிக்­கான அடித்­த­ளத்தை இட்­டுள்ள மைத்­தி­ரி­பால சிறி­சேன அதனைப் படிப்­ப­டி­யாக பலப்­ப­டுத்தி முன் ­னோக்கி நகர்த்திச் செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருக்­கின்றார். எனவே அவ­ருக்கு முழு ஆத­ர­வையும் வழங்கிச் செயற்­பட வேண்டும் என்­பது அவ­ருக்கு அர­சியல் ரீதி­யாக நெருக்­க­மா­ன­வர்­களின் கருத்­தாகும்.

இந்த நாட்டில் முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்­தி­ருந்த பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த தேசிய வீர­னா­கவே மஹிந்த ராஜபக்ஷவை சிங்­கள மக்­கள் நோக்­கி­யி­ருக்­கின்­றார்கள். அத்­த­கைய மதிப்­புக்கு உரிய ஒரு­வரை மிகவும் அவ­தா­ன­மாகக் கையாள்­வதன் ஊடா­கவே அவ­ருக்கு ஆத­ர­வான மக்­களின் ஆத­ரவைப் படிப்­ப­டி­யாக வென்­றெ­டுக்க முடியும் என்ற நோக்­கத்தில் மைத்­தி­ரி­பால சிறி­சேன காரி­யங்­களை முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாகத் தெரி­கின்­றது.

மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் இடையில் சந்­திப்பு நடை­பெற்ற அதே சந்­தர்ப்­பத்தில், நாட்டின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ர் மங்­கள சம­ர­வீர, மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்­தினர் 18 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான சொத்­துக்­களை வெளி­நா­டு­களில் பதுக்கி வைத்­தி­ருப்­ப­தாகத் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதன் மூலம் முன்­னைய ஆட்­சியில் இடம் ­பெற்ற பாரிய ஊழல்கள் மோச­டிகள் அம்­ப­ல­மா­கி­யி­ருப்­ப­தா­கவும் அவர் குறிப்­பிட்­டிருக்­கின்றார். வெளி­நாட்டு உளவுப் பிரி­வு­களின் ஊடாக இந்தத் தக­வல்கள் கிடைத்­தி­ருப்­ப­தா­கவும் அவர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இந்த அதிர்ச்­சி­ய­ளிக்கும் தக­வல்கள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அர­சி­ய­லுக்குள் அதி­கார பல­முள்ள பத­வி­யா­கிய பிர­தமர் பத­வியை இலக்கு வைத்து பிர­வே­சிப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருக்­கின்ற சந்­தர்ப்­பத்தில் வெளி­யா­கி­யி­ருப்­பது நிச்­ச­ய­மாக சிங்­கள மக்­களைச் சிந்­திக்கத் தூண்­டி­யி­ருக்கும் என்று நம்­பலாம்.

ஏனெனில் அமைச்சர் மங்­கள சம­ர­வீர ராஜ­பக் ­ஷக்கள் மீது சுமத்­தி­யுள்ள ஊழல் மற்றும் மோசடி குற்­றச்­சாட்­டா­னது மிக சாதா­ர­ண­மா­ன­தல்ல. அது பற்­றிய விப­ரங்கள் மிகவும் பார­தூ­ர­மா­ன­வை­யாக இருக்­கின்­றன.

ராஜபக் ஷ குடும்­பத்­தினர் வெளி­நா­டு­க ளில் பதுக்­கி­ வைத்த சொத்­துக்­களின் பெறு­ம ­தி­யா­னது, தேசிய மொத்த உற்­பத்­தியின் நான்கில் ஒரு பங்­காகும் என்ற குண்­டை யும் அவர் தூக்கிப் போட்­டி­ருக்­கின்றார். இந் தப் பாரிய மோச­டியை முழு­மை­யாகக் கண்ட­றி­வ­தற்­காக நான்கு நாடு­களின் உத­வியைத் தாங்கள் நாடி­யி­ருப்­ப­தா­கவும் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அரச சொத்­துக்கள், அரச நிதி மோசடி என்­பன தொட­ர்­பாக விசா­ரணை நடத்­து­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிதிக்­குற்­ற­வியல் பிரி­வினர் முன்­னைய அரச தரப்­பினர் பலரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அவர்­களில் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பசில் ராஜ­பக் ஷ முக்­கி­ய­மா­ன­வ­ராகும். பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ராக இருந்த கோத்த­பாய ராஜ­பக் ஷவும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி ­ருக்­கின்­றது.

முன்­னைய ஆட்­சியின் அச்­சா­ணி­க­ளா­கவும் மும்­மூர்த்­தி­க­ளா­கவும் திகழ்ந்த ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அவ­ரு­டைய சகோ­த­ரர்­க­ளான பசில் ராஜ­பக் ஷ மற்றும் கோத்தபாய ராஜபக் ஷ ஆகி­யோ­ருக்கு எதி­ரான நிதிக்­குற்­றங்கள், இலஞ்ச ஊழல்கள், மோச­டிகள் என்­பன நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் ராஜபக் ஷ குடும்­பத்­தினர் பெரும் தண்­ட­னை­களை அனு­ப­விக்க நேரிடும் என்­பதில் சந்­தே­க­மில்லை. அதே­நேரம் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் யுத்தக் குற்­றச்­செ­யல்­க­ளுக்­கான குற்­றச்­சாட்­டுக்­களும் கூட மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் கோட்­டா­பய ராஜபக்ஷ ஆகியோர் மீது நேர­டி­யாக சுமத்­தப்­பட்­டா­லும ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்ட ஜனா­தி­பதி பதவி என்­பது இந்த நாட்டின் அதி­யுயர் பத­வி­யாகும். இந்த நாட்டின் அதி­யுயர் தலைவர் அவரே. அத்­த­கைய தலைமைப் பத­வியில் இருந்த ராஜபக்ஷ மற்றும் அவ­ரு­டைய குடும்­பத்­தினர் மீது பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்ற நிலையில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அர­சியல் பிர­வேசம் செய்­வ­தென்­பது மேலோட்டப் பார்­வை­யிலும், சாதா­ர­ண­மா­கவும் ஏற்­றக்­கொள்­ளத்­தக்க விட­ய­மா­காது.

நெருப்­பில்­லாமல் புகை­ய­மாட்­டாது. எனவே, ராஜ­பக்­ ஷக்கள் மீது சுமத்­தப்­பட்­டுள்ள அல்­லது அவர்­க­ளுக்கு எதி­ராகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற மோச­டிகள், வெளி­நா­டு­களில் சொத்துப் பதுக்­கல்கள் என்­பன வெறும் கட்­டுக்­க­தைகள் என்றோ, வெறு­மனே அர­சியல் பழி­வாங்­க­லுக்­காகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்ற குற்­றச்­சாட்­டுக்­க­ளா­கவே கருத முடி­யாது. அவர்­க­ளு­டைய ஆட்சிக் காலத்தில் மீது நிதி­மோ­சடி மற்றும் ஊழல் இலஞ்சம் போன்­ற­வற்­றுடன் தொடர்­பு­டைய விட­யங்­களில் அவர்­களைத் தொடர்­பு­ப­டுத்தி பல விட­யங்கள் குற்­றச்­சாட்­டுக்­க­ளாகப் பேசப்­பட்­டி­ருந்­தன.

அவர்கள் நிக­ரற்ற அதி­கார பலத்தைக் கொண்­டி­ருந்­த­தனால், அவர்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்­களும், பொது விட­யங்­களில் அக்­கறை கொண்­டி­ருந்­த­வர்­களும் வெளிப்­ப­டை­யாக அந்தக் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து அவர்­க­ளுக்கு எதி­ராகச் செயற்­பட துணி­ய­வில்லை. அவ்­வாறு துணிந்­தி­ருந்தால் அவர்கள் உயிர் தப்ப முடி­யாது என்­பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள்.

இத்தகைய ஒரு நிலைமையில் மஹிந்த ராஜபக்ஷ அரசியலுக்குள் மீள் பிரவேசம் செய்ய முயற்சிப்பதென்பது, இந்த நாட்டு அரசியலின் மோசமான நிலைமையை எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருக்கின்றது. இலங்கையில் அரசியலுக்கு வருபவர்கள் எல்லோருமே நேர்மையானவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில், இலங்கை அரசியல் என்பது தெற்காசிய பிராந்திய நாடுகளில் உள்ளது போன்று ஊழல்கள் நேர்மையின்மை என்பவற்றின் நிலைக்களனாகவே உள்ளது. ஆயினும் அதியுயர் பதவியை வகித்தவர்களும், இந்த நாட்டின் மோசமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்களும் மோசடிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்பதை எவரும் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது.

புதிய அரசாங்கம் குறுகியதொரு காலப்பகுதியில் நாட்டில் உருவாக்கியுள்ள நல்லாட்சியை, வரப்போகின்ற பொதுத் தேர்தலில் மேலும் வலுவுள்ளதாக முன்னெடுத்துச் செல்வதற்குரிய நிலைமையை உருவாக்க வேண்டியது நாட்டு மக்களின் கடமையாகும். இந்தக் கடமையைச் சரிவர செய்யத் தவறினால், மீண்டும் ஓர் ஊழல்கள் மலிந்த ஆட்சியே நாட்டில் நிலைபெறும். அத்தகைய ஆட்சியொன்று வருமாகில், அது இந்த நாட்டின் எதிர்காலத்திற்கும் வருங்காலச் சந்ததியினருக்கும் நன்மை பயக்கப் போவதில்லை.

எனதுவே, முன்னைய ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் அல்லது அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பான விடயங்கள் குறித்து நேர்மையான அரசியல் கலப்பற்ற விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். அத்தகைய நிரூபணத்தின் ஊடாக அவர்களுக்கு எதிராக முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இத்தகைய நடவடிக்கையொன்றின் ஊடாகவே நாட்டில் நல்லாட்சி தொடர்ந்து நிலவவும், ஜனநாயகம் தழைத்தோங்கவும் வழிபிறக்கும்.