பொதுத் தேர்தலை ரணில் விரும்பமாட்டார்
19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறை வேற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலமான வியூகங்களை அமைத்தார். அதில் 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஆதரவு தர மறுத்தால், மறு நாளே பாராளுமன்றத்தைக் கலைப்பேன் என்பது முக்கியமானது.
இவ்வாறு மைத்திரி கூறியதற்குள் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தரு வீர்களாயின் இப்போதைக்குப் பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்ற உட்பொருள் உள்ளது.
இதனைப் புரிந்து கொண்ட பாராளுமன்ற உறுப் பினர்கள் அடுத்த தேர்தலில் கதிரை கிடைக்குமோ இல்லையோ கிடைத்த கதிரையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தனர். இதன் காரணமாக 19ஆவது திருத்த சட்ட மூலத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதுதவிர, 19ஆவது திருத்த சட்ட மூலத்திற்கான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாக தனது கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரி சந்தித்தார்.
அன்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினர்களே! எனது அதிகாரத்தைக் குறைப்பதற்கு உங்களிடம் ஆணை கேட்கிறேன் என்றார். இப்படி மைத்திரி கூறிய போதுதான் பாராளுமன்ற உறுப்பினர்கள் விழித்துக் கொண்டனர். அட, ஜனாதிபதி மைத்திரி தனது அதிகாரத்தைக் குறைப்புச் செய்வதற்குத்தான் 19ஆவது திருத்தச் சட்ட மூலத்தைக் கொண்டு வருகிறார். எனவே நாங் கள் சந்தோசமாக வாக்களித்து எங்களின் பதவி காலத்தையும் நீடித்துக் கொள்வோம் என்று முடிவு செய்தனர்.
19ஆவது திருத்த சட்ட மூலத்தை நிறைவேற்றிய கையோடு பாராளுமன்றத்தைக் கலைப்பது மைத் திரியின் திட்டமாக இருந்த போதிலும் 19ஆவது திரு த்தச் சட்ட மூலத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்க ளின் ஆதரவு கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்பதை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
இந்நிலையில், பாராளுமன்றக் கலைப்பை ஒத்தி வைப்பது சட்ட மூலத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வழி முறையாக உணரப்பட்டது. அதேநேரம் 19ஆவது திருத்தச் சட்ட மூலம் நிறை வேற்றப்பட்டதையடுத்து பிரதம வேட்பாளர் என்ற ஒரு விடயம் முதன்மை பெறுகிறது.
எனவே, பாராளுமன்றத்தை உடனடியாகக் கலைப் பதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு போதும் விரும்பமாட்டார். பாராளுமன்றத்தைக் கலைத் தால், கிடைத்த பிரதமர் பதவியை நான்கு மாதங் களில் பறி கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதேசமயம் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவி ரணிலுக்கு கிடைப்பதற்கான சந்தர்ப் பங்களும் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
ஆக, பாராளுமன்றத்தைக் கலைக்க விடாமல் தடுக்கவேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க மிகவும் உறுதியாக இருந்திருப்பார். அதாவது குறைந்தது ஒரு வருடத்திற்கேனும் பிரதமர் பதவியில் இருப்பதற்குத் தன்னை அனுமதி க்க வேண்டும் என்பது ரணிலின் கோரிக்கையாக இருந்திருக்கும்.
இது தவிர, உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்தும் போது மகிந்த ராஜபக் கம்பனி களத்தில் இறங்கி பொதுத் தேர்தலைத் தமக்குச் சாதகமாக்கவும் கூடும். ஆகவே, பாராளுமன்றக் கலைப்பை பிற்போடுவ தன் மூலம் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற அடிப்படையில், பொதுத் தேர்தலானது 2016ஐ தாண்டக் கூடும் என அனுமானிக்கலாம். எதுவாயினும் பாராளுமன்றக் கலைப்புக்கு முன்னதாக சிறையில் அடைக்கப்பட வேண்டியவர் கள் அடைபடுவார்கள் என்பது நூறுவீத உண்மை.
வலம்புரி