Breaking News

மண்டைதீவில் உல்­லாச விடுதி நிர்­மா­ணப்­ப­ணிகள் இடை­நி­றுத்தம் - ஐங்­க­ர­நேசன்

மண்­டை­தீவில் 37மாடி­களைக் கொண்ட உல்­லாசப் பய­ணிகள் விடு­தியை நிர்­மா­ணிப்­ப­தற்கு மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை வடக்கு மாகாணப் பணிப்­பா­ள­ரிடம் அனு­மதி பெற்­றி­ருப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. உல்­லாச விடு­தியை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அவற்றை இடை நிறுத்­தி­யுள்­ள­தாக வட மாகாண சுற்­றாடல் அமைச்சர் பொ. ஐங்­க­ர­நேசன் தெரி­வித்­துள்ளார்.

மண்­டை­தீவு எட்டாம் வட்­ட­மாரக் கடற்­க­ரை­யோ­ர­மாக இரு­பத்தி ஐந்து ஹெக்­டெயர் அரச காணியில் 37 மாடி­களைக் கொண்ட இந்த விடு­தியை அமைக்கும் ஆரம்ப நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்­பட்­டி­ருந்­தன.

இதுதொடர்­பாக மண்­டை­தீவு மக்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.ஸ்ரீத­ர­னுக்கும் வடக்கு மாகாண விவ­சாய சுற்­றாடல் அமைச்சர் பொ.ஐங்­க­ர­நே­ச­னுக்கும் அறி­வித்­ததைத் தொடர்ந்து அவர்கள் குறிப்­பிட்ட பகு­திக்குச் சென்று நிலை­மை­களை நேரில் அவ­தா­னித்­தார்கள்.

அத்­துடன் வடக்கு மாகாண சபை சுற்­றா­டல்­துறை அபி­வி­ருத்­திக்குத் தடை­யாக இல்லை எனவும் ஆனால் சுற்­றா­டல்­துறை எமது மக்­களின் பண்­பாட்டுச் சூழல், இயற்கைச் சூழ­லுக்கு பாதிப்­புக்கள் ஏற்­ப­டா­த­வாறு அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதாக தெரிவித்த அமைச்சர் பொ. ஐங்கரநேசன் இவ் நிர்மாணப்பணியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.