மகிந்தவின் பாதுகாப்புக்கு குண்டுதுளைக்காத 2 பென்ஸ் கார்கள் உட்பட 27 வாகனங்களாம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக அதியுயர் பாதுகாப்புடன் கூடிய இரண்டு பென்ஸ் கார்கள் உட்பட 27 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன'' என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் நேற்று அறிவித்தார்.
அத்துடன், 105 பொலிஸாரும், 104 முப்படையினரும் அவருக்கான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும்,தேர்தல் காலத்தில் மகிந்தவுக்கு மேலும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான உரிமைகள் தொடர்பிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் தினேஷ் குணவர்தன எம்.பி. நேற்றுமுன்தினம் எழுப்பியிருந்த கேள்விக்கு நேற்று பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்படி விவரங்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.