வடக்கு முதல்வர் அமெரிக்கா பயணம்: முக்கிய அதிகாரிகளைச் சந்திப்பார்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் அமைப்புக்களின் அழைப்பையேற்று அமெரிக்கா பயணமாகியுள்ளார். நேற்று வியாழக்கிழமை அமெரிக்கா சென்றுள்ள அவர், சுமார் ஒரு வார காலம் அங்கிருப்பார் எனத் தெரிகின்றது.
அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகப் பங்குகொள்ளும் அவர், அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளையும் சந்திப்பார். இதன்போது வடக்கு நிலை தொடர்பாக முக்கியமாக ஆராயப்படும்.
அமெரிக்க விஜயத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் லண்டன் செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுபகின்றது. லண்டனிலும் பல நிகழ்வுகளில் அவர் பங்கேற்பார்.








