Breaking News

ஹக்கீமும் திகாம்பரமும் அரசை விட்டு வெளியேற வேண்டும்

இரு­ப­தா­வது திருத்­தத்­திற்கு அமைச்ச­ர­வையில் ஆத­ரவு தெரி­வித்து விட்டு வெளியில் எதிர்க்கும் ஹக்­கீமும், திகாம்­ப­ரமும் அர­சாங்­கத்தை விட்டு வெளி­யேற வேண்டும் என நேற்று சபையில் தெரி­வித்த எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா, இன­வாதத்­தையும், மத­வா­தத்­தையும்,

பிரி­வினை வாத்­தையும் மற்றும் அடிப்­படை வாதத்­தையும் ஆத­ரிக்கும் குழுக்­களே 20ஐ எதிர்க்­கின்­றது. ஐ.தே.கட்சி இதனை நிறை­வேற்­று­வ­தற்கு வேண்­டு­மென்றே தடை போடு­கின்­றது என்றும் எதிர்க்­கட்சி தலைவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்­கி­ழமை இடம்­பெற்ற 20வது திருத்தம் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே எதிர்­கட்சி தலைவர் நிமால் சிறி­பால டி சில்வா இவ்­வாறு தெரி­வித்தார்.

சபையில் எதிர்­கட்சி தலைவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

அர­சாங்கம் இந்த விவாத்தை இதய சுத்­தி­யுடன் முன்­வைக்­க­வில்லை. எதிர்­கட்­சியை விமர்­சிக்கும் இலக்­கிற்­கா­கவே இவ்­வி­வாதம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் 19வது திருத்­தமும், 20வது திருத்­தமும் நிறை­வேற்­றப்­படும் என உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டது.

ஆனால் இன்று 19 நிறை­வேற்­றப்­பட்டு விட்­டது. 20ஐ நிறை­வேற்­று­வதை பின்­தள்ளும் முயற்­சி­களை ஐ.தே.க முன்­னெ­டுத்து முட்­டுக்­கட்டை போடு­கின்­றது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்­பி­லான 20வது திருத்தம் தொடர்­பாக சிறு கட்­சிகள் மற்றும் நாம் பிர­த­ம­ருடன் 20 தட­வை­க­ளுக்கு மேல் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம். அத்­தோடு இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் அனை­வரும் இணங்­கிய பின்­னரே 20க்கான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

எனவே அமைச்­ச­ர­வையில் ஆத­ரித்­து­விட்டு இன்று வெளியில் ஹக்­கீமும், திகாம்­ப­ரமும் எதிர்க்­கின்­றார்கள். உண்­மை­யி­லேயே இவர்கள் எதிர்த்தால் அரசை விட்டு வெளி­யேற வேண்டும். அரசின் திருத்தம் எதிர்க்­கட்­சி­யி­னதும் ஆளும் தரப்­பி­ன­ரதும் எதிர்ப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

இது அரசின் இய­லா­மையே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. தற்­போது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்­டி­ருக்­கின்­றது. எனவே தேர்­தலில் சந்­தர்ப்பம் வழங்­கப்­பட வேண்டும் என்ற கார­ணத்தை முதன்­மைப்­ப­டுத்தி 20வதை நிறை­வேற்­றாது காலத்தை கடத்தும் நாட­கத்­தையே அரசு அரங்­கேற்றி வரு­கின்­றது.

இத்­தி­ருத்தம் தொடர்­பாக பிரச்­சி­னைகள் இருப்பின் அது தொடர்பில் குழு நிலையின் போது விவா­திக்­கலாம். திருத்­தங்கள் சமர்ப்­பிக்­கலாம். பொதுத்­தேர்­தலில் எனது தொகு­தியில் நான் தோல்­வி­ய­டைந்­தாலும் பர­வா­யில்லை. நான் இதனை ஆத­ரிக்­கின்றேன். இது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இன, மத, மொழி, குல ரீதியில் மீண்டும் தேர்தல் முறைமை மாற்றம் நாட்டுக்கு தேவையில்லை. இவ்வாறான நிலையில் ஆதரிப்பவர்களே 20 ஐ எதிர்த்துள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.