Breaking News

"மஹிந்தவா அல்லது நானா பிரதமர் வேட்பாளர் என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்"

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் பிர­தமர் வேட்­பா­ளரை தெரிவு செய்­வது தொடர்பில் உத்­தி­யோ­க­பூர்வ பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­தி­பதி இன்னும் அனு­மதி வழங்­க­வில்லை என தெரி­விக்கும் எதிர்க்­கட்சி தலைவர் நிமல் சிறி­பா­லடி சில்வா மஹிந்­தவா அல்­லது நிமலா பிர­தமர் வேட்­பாளர் என்­பதை ஜனா­தி­பதியே தீர்­மா­னிக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியில் மஹிந்த மைத்­திரி மோதல் பல­ம­டைந்து செல்­கின்ற நிலையில் இது தொடர்பில் கட்­சியின் உறுப்­பி­னரும் எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான நிமல் சிறி­பா­ல டி சில்­வா­விடம் வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் கூறு­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மையில் தான் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு இயங்­கு­கின்­றது. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் தலை­மைத்­துவம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமே உள்­ளது. இந்த நிலையில் கட்­சியின் தலைவர் மற்றும் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டமே கட்­சியின் அனைத்து தீர்­மா­னங்­க­ளையும் மேற்­கொள்ளும். ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் சார்பில் பிர­தமர் வேட்­பாளர் யார் என்ற தீர்­மானம் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்டு கட்­சியின் தலை­வரால் அறி­விக்­கப்­படும். 

இதில் கட்­சியின் சார்பில் பிர­தமர் வேட்­பாளர் மஹிந்­தவா அல்­லது நிமலா என்­பதை ஜனா­தி­ப­தியே தீர்­மா­னிப்பார். அதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் தமது தனிப்­பட்ட கருத்­து­க்களை தெரி­விப்­பதை கூட்­ட­ணியின் ஒட்­டு­மொத்த முடி­வா­கவும் கரு­து­வது தவ­றா­னது. கட்­சிக்குள் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை ஆத­ரிக்கும் ஒரு குழு­வினர் உள்­ளனர். அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆத­ரிக்­கவும் மற்­றொரு குழு­வினர் உள்­ளனர். அவர்­களின் தனிப்­பட்ட கருத்­து­க்களை கட்சிக் கூட்­டத்தில் ஆராய்ந்து இறு­தியில் ஒரு­மித்த தீர்­மா­னத்­துக்கு வர­வேண்டும்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் தமது கட்­சியின் பெயரில் செய்­தி­யாளர் சந்­திப்­பு­களை நடத்த முடியும். அதை எம்மால் தடுக்க முடி­யாது. ஆனால் ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பெயரில் இவர்கள் முரண்­பாட்டுக் கருத்­துக்­களை முன்­வைப்­பது கட்­சியின் விதி­க­ளுக்கு முர­ணா­ன­தாகும். அதை கட்சி கூட்­டத்தில் விவா­தித்து தீர்­மானம் எடுப்போம். அதேபோல் கட்­சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்த ஒரு­சிலர் முயற்­சித்து வரு­கின்­றனர்.

கட்­சியை உடைப்­ப­தற்­காக மஹிந்த மைத்­திரி முரண்­பாட்டை தூண்­டி­விட்டு அதனை சாத­க­மாக பயன்­ப­டுத்த எண்­ணு­கின்­றனர். இதற்கு ஒரு­போதும் நாம் இடம்­கொ­டுக்க மாட்டோம். கட்­சிக்குள் மஹிந்­த­வையும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­யையும் ஒன்­றி­ணைத்து தேர்­தலில் முகம்­கொ­டுக்க நாம் தயா­ராகி வரு­கின்றோம். அதற்­கான முயற்­சி­களை நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். தொடர்ந்தும் ஜனா­தி­ப­தி­யு­டனும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­டனும் நாம் பேசி வரு­கின்றோம். சாத­க­மான பதிலை இரண்டு தரப்பில் இருந்தும் நாம் எதிர்­பார்த்தே பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்றோம்.

ஆயினும் பிர­தமர் வேட்­பாளர் தொடர்பில் இது­வ­ரையில் உத்­தி­யோ­க­பூ­ர்வ பேச்­சு­வார்த்­தை­களை நாம் இன்னும் கட்­சிக்குள் ஆரம்­பிக்­க­வில்லை. ஜனா­தி­பதி அதற்­கான அனு­ம­தியை இன்னும் வழங்­க­வில்லை. ஆகவே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலை அர­சாங்கம் அறி­விக்கும் சந்­தர்ப்­பத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­தரக் கட்சி அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும். 

ஆனால் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட முன்னர் தேர்தல் திருத்த சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். தேர்தல் திருத்தச் சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தாக ஜனா­தி­பதி எமக்கு உறு­தி­ய­ளித்­துள்ளார். 19ஆம் திருத்தச் சட்டம் கொண்­டு­வந்­த­தைப்போல் 20ஆம் திருத்­தமும் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என நாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றோம்.

ஆகவே அதற்கமைய ஜனாதிபதி எமக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நாம் நம்புகின்றோம். இந்நிலையில் பிரதமர் வேட்பாளர் தொடர்பில் நாம் குழப்பங்களை ஏற்படுத்த விரும்பவில்லை. பிரதமர் ஆசை உள்ள எவரும் கட்சிக்குள் இருந்தால் தமது தனிப்பட்ட விருப்பத்தை கட்சி கூட்டத்தில் முன்வைக்கலாம் எனக் குறிப்பிட்டார்.