Breaking News

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக அமெரிக்க கண்காணிப்பாளர்கள்?

இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்க, அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப் படவுள்ளனர்.

எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக, கண்காணிப்பாளர்களை அழைப்பது குறித்து, அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிறுவகம், ஜிம்மி கார்ட்டர் நிறுவகம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படலாம் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இதற்கு முன்னர் நடந்த தேர்தல்களைக் கண்காணிப்பதற்கு, ஐரோப்பிய ஒன்றியம், கொமன்வெல்த், மற்றும் இந்தியாவில் இருந்து கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.அமெரிக்காவில் இருந்து முதல்முறையாக கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவுள்ளனர்.

அதேவேளை, சுதந்திரமான, நியாயமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு (பவ்ரல்) தாம் இம்முறை 50 வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அழைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.