மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு? - THAMILKINGDOM மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு? - THAMILKINGDOM

 • Latest News

  மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு?

  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படலாம் என்று ஐ.நா. சபையை மேற்கோள் காட்டிச் செய்திகள் வெளியாகியுள்ளன. 

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலினால் நடத்தப்பட்டு வரும் இலங்கை தொடர்பான விசாரணைகளில், குறித்த நபர்கள் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று ராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  இவர்களுடன் மேலும் ஐந்து இராணுவ ஜெனரல்களுக்கு எதிராகவும் யுத்தக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் மீது கட்டளையிடல், கடத்தல், மனித படுகொலை, வழிநடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலின் அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்மாக ஒப்படைக்கப்பட உள்ளது. 

  அத்துடன் இந்த அறிக்கை எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளின் போது வெளியிடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்த, கோத்தா, பஸில் மீது யுத்தக்குற்றச்சாட்டு? Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top