Breaking News

யாழ்.நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் கைதான 30 பேருக்குப் பிணை!

யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 30 சந்தேக நபர்களுக்கு யாழ். நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தமை தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்றில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டன. யாழ். சிறைச்சாலை மீது தாக்குதல் நடத்திய வழக்கின் சந்தேக நபர்கள் 19 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களை 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பொலிஸ் காவலரண் மீது தாக்குதல் நடத்திய பிறிதொரு வழக்கின் 11 சந்தேக நபர்கள் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை 5 இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரு ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், அனைத்து பிணையாளிகளும் மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிமைகளில் யாழ். பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்பதோடு, சந்தேக நபர்கள் பிறிதொரு வழக்கில் கைசெய்யப்பட்டால் குறித்த பிணை ரத்துச் செய்யப்படும் என்ற எச்சரிக்கைகையும் நீதிமன்றம் இதன்போது விடுத்தது.