யாழில் மற்றுமொரு சந்தேகநபர் விளக்கமறியல்!
யாழ். நீதிமன்றச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் கைதாகிய மேலுமொரு சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை கைது செய்த குற்றத் தடுப்பு பொலிஸார் யாழ். நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்தினர். பின்னர் எதிர்வரும் 26ம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் மண்கும்பான் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ். நீதிமன்ற சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைதாகி விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ள 21 சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.








