Breaking News

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித் திட்டம்

இந்தியாவில் தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.





சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு இந்தியாவில் ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக முறைப்பாடு எழுந்ததை தொடர்ந்து அந்த அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்தது. இந்நிலையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.

மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அனைத்து மாநில பொலிஸாருக்கும் உளவு எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாட்டை சேர்ந்தவர்களை குறிவைத்து ஐ.எஸ். அமைப்பு தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதோடு வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என உளவுத் துறை எச்சரித்திருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.