Breaking News

சிங்­கள அர­சி­ய­லா­ளர்­களால் அழிந்தும் அழி­யாத புலிகள்

காலத்­திற்கு காலம் மாறி செல்லும் அர­சியல் சூழ­லுக்கு மத்­தியில் அர­சியல் நடத்­து­வ­தென்­பது பெரும் பிர­யத்­த­னங்­களை கடந்­தாக வேண்­டிய நிலையை உரு­வாக்­கு­கின்­றது.

தேர்தல் காலங்­களில் ஒரு­வ­ரை­யொ­ருவர் சாடு­வதும் செயற்­பா­டு­களை குறை­க­ளா­கவே வெளிப்­ப­டுத்­து­வதும் அர­சியல் மேடை­களில் ஒன்றும் புதிய விட­ய­மா­கி­விட­வில்லை. இலங்கை அர­சி­யலை பொறுத்­த­வரை குறைப்­படும் கருத்­தின்றி அர­சியல் இல்லை என்ற அள­விற்கு வியா­பித்­துள்­ளது என்­பதே உண்மை.

இந் நிலையில் சிங்­கள அர­சி­ய­லா­ளர்­க­ளிடம் 80 களின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இருந்தே தமிழ் புலிகள் அல்­லது தமிழ் ஈழ கோரிக்­கையை முன்­வைத்த இயக்­கங்­களை சாடும் அர­சியல் கலா­சாரம் தோன்­றி­யி­ருந்­தமை மறுப்­ப­தற்­கில்லை.

இதன் தொடர்ச்சி முடி­வ­டைந்து விட்­ட­தாக யுத்த முடி­வுக்கு பின்னர் எண்­ணி­ய­போ­திலும் தேர்­தல்கள் மற்றும் ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேரவை அமர்­வுகள் நெருங்கும் போதெல்லாம் மீண்டும் புலி அர­சியல் தலை­தூக்கி வந்­தி­ருந்­தது.

தமி­ழர்கள் என்­றாலே புலிகள் என்று பார்த்த சிங்­கள தலை­மைகள் சில இந்த எண்­ணப்­பாட்டில் இருந்து இது­வரை விடு­தலை பெறா­தது முய­லுக்கு மூன்­றுகால் என்­ப­தற்கு ஒப்­ப­தா­ன­தா­கவே கொள்­ள­வேண்டும்.

சிங்­கள மக்­க­ளிடம் அர­சியல் நடத்த புலி தேவைப்­படும் அர­சியல் தலை­மைகள் இன்றும் ஊச­லா­டிக்­கொண்­டி­ருப்­பது புலி­க­ளுக்கு பெருமை சேர்ப்­ப­தா­கவே எண்­ணத்­தோன்­று­வ­துடன் புலிகள் இன்றி சிங்­கள தலை­மைகள் அர­சியல் செய்­ய­மு­டி­யாதோ என்ற கேள்­வி­யையும் எழுப்­பி­யுள்­ளது.

அண்­மையில் மஹிந்த ராஜ­பக் ஷ புலிகள் மீண்டும் தலை­தூக்க விடாது இருப்­ப­தற்கு தான் பிர­தம வேட்­பா­ள­ராக கள­மி­றங்க உள்­ள­தாக அறி­வித்தல் விடுத்­துள்ளார்.

இதே ராஜ­பக் ஷ 2009 ஆம் ஆண்டின் இறு­திப்­ப­கு­தியில் இருந்து விடு­த­லைப்­புலிகள் முற்­றாக ஒழிக்­கப்­பட்டு விட்­டார்கள் என்றும் தான் சிங்­கள மக்­களை மீட்க வந்த மீட்­ப­ரா­கவும் காட்டி அடுத்த தேர்­தலில் வெற்­றியை தன­தாக்­கி­யி­ருந்தார்.

இந் நிலையில் மீண்டும் தேர்தல் காலத்தில் கோபி, அப்பன், தேவிகன் என்ற புதிய புலிகள் உரு­வாக்கம் பற்­றிய கதைகள் உரு­வாக்­கப்­பட்டு வவு­னி­யாவின் வெடி­வைத்­தகல் பகு­தியில் வெடி வைத்து கொல்­லப்­பட்­ட­தாக தகவல் பரப்­பப்­பட்­டி­ருந்­தது.

எனினும் அங்கு சென்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எவ­ரு­டைய சட­லத்­தையும் காட்­டு­வ­தற்கோ அல்­லது பத­வியா வழி­யாக அனு­ரா­த­புரம் கொண்டு செல்­லப்­பட்­ட­தாக தெரிவிக்­கப்­பட்ட அம் மூவ­ரது சட­லங்­களோ காட்­டப்­ப­ட­வில்லை.

பாரிய தேடு­தல்கள் மற்றும் கள­மு­னை­போன்ற கட்­ட­மைப்­புடன் மேற்­கொள்­ளப்­பட்ட அம் மூவரின் மரணம் புதிய புலிகள் உரு­வாக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­தி­ய­தாக சிங்­கள மக்­க­ளிடம் வாக்கு வங்­கியை தள­ராது வைத்­திருக்க உத­வி­யி­ருந்­தது என்­ப­தற்கு அப்பால் ஏன் அச் சட­லங்­களை காட்ட முடி­யாமல் போனது என்ற கேள்வி இன்றும் எழச்­செய்­கின்­றது.

இந் நிலை­யி­லேயே ஜனா­தி­பதி கதி­ரையை இழந்து நிற்கும் மஹிந்த ராஜ­பக்ஷ­வுக்கும் சிங்­கள இன­வாத அர­சி­ய­லாளர்­க­ளுக்கும் மீண்டும் புலிகள் தேவைப்­ப­டு­கின்­றது என வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் பகி­ரங்­க­மாக தெரிவித்தார்.

அத்­துடன் புலி­களின் பெய­ரையோ தமி­ழர்­களை முன்­னி­லைப்­ப­டுத்­தா­மலோ சிங்­கள அர­சி­ய­லா­ளர்கள் தேர்­தலில் வெற்றி பெற்று காட்­டட்டும் என்ற சவா­லையும் விடுத்­தி­ருந்தார்.

எனவே, இவ்­வா­றான புலி பூச்­சாண்டி காட்டும் அர­சியல் களம் இன்றும் தென்­ப­கு­தியில் மாறா­துள்­ளது. அத்­துடன் புதிய அரசு புலி­களை மீள் உரு­வாக்க முனை­வ­தா­கவும் சாத்தி­ய­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்கி செல்­கின்­றனர்.

அவ்­வ­றாயின் 2009 ஆம் ஆண்­டுடன் புலிகள் ஒழிந்து விட்­டார்கள் என்ற கருத்தில் இன்றும் சிங்­கள தலை­மை­க­ளுக்கு பாரிய சந்­தேகம் உள்­ளமை வெளிப்­ப­டை­ய­ாகி­விடு­கின்­றது. இந் நிலை­யி­லேயே தற்­போது புலம்­பெயர் அமைப்­புக்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யா­டல்கள் புதிய அர­சுக்கு சிங்­கள இன­வாத அமைப்­பு­க­ளி­ட­மி­ருந்தும் மஹிந்த ராஜ­பக்ஷ சார்பு அர­சி­ய­லா­ளர்­க­ளி­ட­மி­ருந்தும் பாரிய சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் லண்­டனில் இடம்­பெற்ற சந்­திப்பு வெறு­மனே இலங்­கையில் முத­லீ­டு­களை ஊக்­கு­விப்­ப­தா­கவோ எதிர்­வரும் அர­சியல் செயற்­பா­டு­களை மையப்­ப­டுத்­தி­ய­தாவோ இருந்­தி­ருக்­க­வில்லை.

இது தமி­ழர்­க­ளு­டைய நீண்ட கால பிரச்­சி­னைக்கு எதிர்­வரும் காலங்­களில் எவ்­வா­றான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும், மக்­களின் உட­ன­டித்­தே­வைகள், விடு­விக்­கப்­ப­ட­வேண்­டிய காணிகள், விடு­விக்­கப்­பட்ட காணி­களில் வீடுகள் அமைத்­துக்­கொ­டுத்தல், அதற்­கான வளங்­களை எப்­படி பெறுதல், அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக தமி­ழர்­களின் பிர­தி­நி­தி­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்தும் கட்சி பிர­தி­நி­தி­யொ­ருவர் நம்­பிக்­கை­யுள்­ள­தாக தெரிவிக்கும் புதிய அர­சுடன் மனம் திறந்து புலம்­பெயர் அமைப்­புகள் மத்­தியில் நடத்­திய கலந்­து­ரை­யா­ட­லா­கவே உள்­ளது.

இந் நிலையில் வெளிவி­வ­கார அமைச்சர் மங்கள் சம­ர­வீர புலம்­பெயர் அமைப்­புகள் அனைத்தும் புலிகள் அல்ல என்றும் அவர்கள் பற்­றிய புகழ் பாடு­தல்­களும் தென் இலங்­கையில் சில சல­ச­லப்பை ஏற்­ப­டுத்த கார­ண­மா­கி­யி­ருக்­கின்­றது என்­ப­தற்கு அப்பால் இவ்­வி­டயம் புலி­களை மீண்டும் உரு­வாக்­கு­வ­தான தொனிப்­பொ­ருளில் பாரா­ளு­மன்றம் வரை சென்று விவா­தத்­திற்­குள்­ளா­கி­யி­ருக்­கின்­றது.

இந் நிலையில் தமி­ழர்­க­ளுக்­கான நியா­யப்­ப­ாடு­களை பேசவும் அதற்­கான தீர்­வைப்­பெ­றவும் உள்­நாட்­டிலும் சரி வெளிநாட்­டிலும் சரி களம் அமைப்­பது என்­பது தென் இலங்கை இன­வாத அர­சி­ய­லா­ளர்­க­ளுக்கு பெரும் சங்கடமாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் கடந்து, வரப் போகும் நாட்களிலும் இவ்வாறான இனவாத அரசியலாளர்களும் மஹிந்த ராஜபக் ஷ சார்பு ஆதரவாளாகளும் புலிப்பூச்சாண்டியை வைத்தே அரசியல் செய்ய துணிந்துள்ள துடன் தமிழர்களின் நீண்ட கால பிரச்சி னைக்கு தீர்வு வழங்குவதென்பதை எட்டாக்கனியாகவே வைத்துள்ளமை வெளிப்படையாகியுள்ளது.

இந் நிலையில் தமிழர்கள் என்றால் புலிகள் என்றும் புலம்பெயர் அமைப்பு கள் என்றால் புலி முகவர்கள் என்றும் காலாகாலமாக சொல்லப்படும் கருத்திய லுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டியதும் அதனை பொய்யாக்க வேண்டியதும் தமிழ் தலைமைகளிடம் உள்ள பாரிய விடயப்பரப்பாகும் என்பது மறுப்பதற்கில்லை.

-கபில்