Breaking News

"20 இற்கு பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டும்''

இரு­ப­தா­வது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். 20 ஆவது திருத்­தத்­தில் 237 ஆசன முறை­மைக்கு ஐ.தே.க.வும் அமைச்­ச­ர­வை யில் இணக்­கத்தை தெரி­வித்துள்­ள­து என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சாளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வி­த்­தார்.


கொழும்பில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன,

இரு­ப­தா­வது திருத்தம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. இனி இது தொடர்பில் எதிர்ப்­புக்கள் இருக்­கு­மாயின் உயர் நீதி­மன்­றத்தில் எதிர்ப்­புக்­களை இரண்டு வாரங்­க­ளுக்குள் தாக்கல் செய்­யலாம். அதன் பின்னர் இரு­ப­தா­வது திருத்தம் பாரா­ளு­மன்­றத்தில் முன் வைக்­கப்­பட்டு விவாதம் நடத்­தப்­பட்டு நிறை­வேற்­றப்­படும்.

இரு­ப­தா­வது திருத்தம் நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்தல் நடத்­தப்­படும். 237 ஆச­னங்­களை கொண்ட இரு­ப­தா­வது தேர்தல் முறைமை மாற்­றத்­திற்­கான திருத்­தத்­திற்கு ஐ.தே.க. அமைச்­ச­ர­வையில் தனது ஆத­ரவை வழங்­கி­யது.

அமைச்­ச­ர­வையின் அனைத்து உறுப்­பி­னர்­க­ளி­னதும் ஆத­ரவும் இதற்­கு கிடைத்­துள்­ளது. அத்­தோடு சிறு­பான்மை இன கட்­சி­களும் சிறிய கட்­சி­களும் இதற்கு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளார்கள். எனவே 20 நிறை­வேற்­றப்­பட்ட பின்­னரே பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும். 

புலம்­பெயர் தமி­ழர்கள் 

கடந்த ஆட்­சியில் கே.பி. ஊடாக மட்­டு­மல்ல நானும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் அமைப்­புக்­க­ளையும் சந்­தித்தேன்.

பெரும்­பா­லா­ன­வர்கள் இலங்­கைக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு விருந்து வழங்கி பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினேன். அவர்கள் வெளி­நா­டு­களில் சம்­பா­தித்த பணத்தை இங்கு முத­லீடு செய்ய விரும்­பு­வ­தா­கவும் ஓய்வு பெற்ற தாங்கள் இலங்­கையின் வடக்கில் தமது சொந்த ஊர்­களில் சொந்த வீடு­களை புனர்­நிர்­மாணம் செய்து இலங்­கையில் வாழ விரும்­பு­வ­தா­கவும் தெரி­விக்­கின்­றனர்.

இதனை அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் தெரி­வித்தேன். ஆனால் அன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் அமை­தி­யாக வாழ விரும்­பிய புலம்­பெயர் தமி­ழர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மையை வழங்­கு­வதை எதிர்த்­தனர்.

அவர்கள் முத­லீடு செய்­வதை எதிர்த்­தார்கள். இலங்­கைக்கு வரு­வ­தையே எதிர்த்­தார்கள். இதனால் நாட்­டுக்கு கிடைக்­க­வி­ருந்த நன்­மைகள் கிடைக்­காமல் போனது. அர­சியல் தீர்­வையும் நிம்­ம­தி­யான வாழ்க்­கை­யை­யுமே இவர்கள் எதிர்­பார்த்­தனர்.

பிரி­வி­னையை இவர்கள் எதிர்த்­தனர். ஆனால் அன்று சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை. இன்­றைய அர­சாங்கம் அதற்­கான சந்­தர்ப்­பத்தை வழங்­கு­கின்­றது தவ­றில்லை.

பொதுத்­தேர்தல்

எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் போதைப்­பொருள் விற்­ப­னை­யா­ளர்கள் கடத்தல்காரர்கள் ஊழல் மோசடிக்காரர்களுக்கு போட்டியிடு வதற்கு வேட்பு மனு வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

விரைவில் போதைப்பொருள் விற்பனை கடத்தல்களை தடுப்பதற்காக விசேட பிரிவு ஆரம்பிக்கப்படவுள்ளது என்றும் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.