நிதி மோசடி விசாரணை பிரிவைக் கலைக்குமாறு மஹிந்த மனுத் தாக்கல்
பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவின் விசாரணைக்குள் ராஜபக்ச குடும்பம் சிக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைப் பிரிவுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த விசாரணைப் பிரிவை உடன் கலைக்குமாறு கோரி மஹிந்த ராஜச பக்வின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவால் நேற்றுக் காலை இந்த மனு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய அரசால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசாரணைப் பிரிவு, சட்டவிரோத மானது என்றும், அரசியல் அமைப்புக்கு முரணானது என்றும் மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த விசாரணைப் பிரிவினூடாக பல்வேறு தரப்பினர் கைது செய்யப்பட்டு, நெருக்கடிகளுக்குள்ளாகி இன்னல்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களைக் கருத்திற் கொண்டு நிதிமோசடி விசாரணைப் பிரிவை கலைக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.