Breaking News

தமிழ் மக்கள் மத்­தியில் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது மைத்­தி­ரியின் செயற்­பா­டுகள் - அரி­ய­நேத்­திரன்

தமது குடும்ப கஷ்ட நிலை கார­ண­மாக வெளி­நாடு சென்று நாடு திரும்­பிய கர­டி­ய­னாற்றை சேர்ந்த இரண்டு பிள்­ளைகளின் தந்­தை­யான கந்­தப்­போடி தவ­ராசா (வயது 36) நேற்று சவூதியில் இருந்து கட்­டு­நா­யக்கா ஊடாக நாடு திரும்­பி­ய­போது கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பா.அரி­ய­நேத்­திரன் தெரி­வித்தார்.

1999ஆம் ஆண்­டிற்கு முன்னர் விடு­த­லைப்­பு­லி­களின் அமைப்பில் இருந்து விலகி தமக்­கான ஒரு குடும்­பத்­தினை அமைத்து பல தட­வைகள் கட்டார், ஈரான் போன்ற நாடு­க­ளுக்­குச்­சென்று வந்த தனது கணவன் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்னர் சவூதி சென்­றி­ருந்து நேற்று நாடு திரும்­பி­ய­போது கைது செய்­யப்­பட்­டுள்ளார் எனவும் தமக்கு இரண்டு பிள்­ளைகள் உள்­ள­தா­கவும் அவ­ரு­டைய மனைவி திரு­மதி தவ­ராசா தன்­னிடம் முறை­யிட்­டுள்­ள­தாக கூறினார்.

இவ­ரது கைது விடயம் தொடர்­பாக மேலும் கூறி­ய­போது,

இந்த நாட்­டிலே மைத்­தி­ரி­பால அர­சாங்­க­மா­னது நல்­லாட்­சிக்­கு­ரிய அர­சாங்­க­மா­னது என வெளியில் காட்­டி­னாலும் உள்­வே­லைப்­பா­டுகள் அனைத்தும் மஹிந்த ஆட்­சியில் இருந்­தது போன்றே இன்றும் நடந்து கொண்டு வரு­கின்­றது.

விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் இருந்து புணர்­வாழ்வு பெற்றோ அல்­லது பல வரு­டங்­க­ளுக்கு முன்னர் அந்த அமைப்பில் இருந்து வில­கி­ய­வர்­களை இன்று கட்­டு­நா­யக்­காவில் வைத்து கைது செய்­வ­தென்­பது மிகவும் வேண்­டத்­த­காத ஒரு செயற்­பா­டா­கவே பார்க்­க­வேண்டி இருக்­கின்­றது.

தாங்கள் இவர்­க­ளது கைது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்­திலும் ஏன் இந்த நாட்டின் சட்டம், ஒழுங்­கிற்கு பொறுப்­பான அமைச்­ச­ராக இருக்­கக்­கூ­டிய அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வி­டமும் பல­முறை இவ்­வா­றான கைதுகள் தொடர்­பாக கூறி­யி­ருக்­கின்றோம் ஆனால் எதுவும் நடந்­த­பா­டில்லை.

இது இவ்­வாறு இருக்க அண்­மையில் புலம்­பெயர் தேசம் சென்ற வெளி­வி­கார அமைச்சர் மங்கள சமரவீர புலம்­பெயர் மக்­க­ளுக்­கா­க­வேண்டி பெரிய விழாவை செய்­ய­வேண்டும் என கூறி­யி­ருக்­கின்றார் என்­ப­தனை பார்க்கும் போது மைத்­திரி அர­சாங்­கத்தில் உள்­நாட்டில் நடப்­பது ஒன்று, வெளி­நாட்டில் நடப்­ப­தொன்று போல் உள்­ள­தனை தற்­போ­தைய நிகழ்­வுகள் புடம்­போட்­டுக்­காட்­டு­கின்­றன.

இந்த நாட்டின் தற்­போ­தைய ஜனா­தி­பதி தமிழ் மக்­க­ளுக்கு ஏதாவது நல்லதை செய்வார் என்று ஏங்கியிருக்கும் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான கைதுகளை தொடர்ந்து செய்து கொண்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது எனவும் கூறினார்.