Breaking News

எவரும் பிர­த­ம­ரா­க­லாம்! ஐ.தே.க.வுடன் தனிப்­பட்ட ரீதி­யி­லான உடன்­­ப­டிக்கை எது­வு­மில்லை - ஜனா­தி­ப­தி

இலங்­கையில் எந்தப் பிர­தே­சத்­தி­லி­ருந்தும் பிர­தமர் ஒருவர் உரு­வா­கலாம். அதற்கு தடைகள் கிடை­யாது என்று தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஐ.தே.க.வுடன் எந்த வித­மான தனிப்­பட்ட ரீதி­யி­லான உடன்படிக்­கையையும் செய்து கொள்ளவில்­லை­யென்றும் கூறினார்.

அன்று ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றிய பின்­னர் 49 அமைப்­புக்­க­ளுடன் உடன்பாடு­களை ஏற்­ப­டுத்திக் கொண்­ட­தா­கவும் ஜனா­தி­பதி தெரி­வித்­தார்.

''ஒன்­று­ப­டுவோம், வெற்றி பெறுவோம்,பாடு­ப­டு வோம்'' என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் செயற்­பாட்­டா­ளர்­களை தெளி­வு­ப­டுத்தும் கூட்­டத்­தொ­டரின் முத­லா­வது கூட்டம் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தம்­ப­தெ­னி­யவில் இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி இங்கு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது

நாட்­டிற்கு தேவைப்­படும் அர­சியல் மற்றும் சமூக மாற்­றத்தை பெற்றுக் கொடுப்­ப­தற்கு பண்­டா­ர­நா­யக்க வழங்­கிய அர்ப்­ப­ணிப்பை போன்று மீண்டும் அர்ப்­ப­ணிப்­புக்கள் மேற்­கொள்ள வேண்­டிய கால கட்டம் இது­வாகும்.

அதற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செய­லாற்­று­வ­தற்கு நான் தயா­ரா­கவே இருக்­கின்றேன். அது விட­யத்தில் நான் ஒரு போதும் பின்­னிற்க மாட்டேன். உலகில் சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்த முயற்­சி­களை மேற்­கொண்ட பலர் பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­ட­தோடு மட்­டு­மல்­லாமல் உயிர்த் தியாகம் செய்யும் நிலை­மையும் ஏற்­பட்­டது. எந்தச் சவால் எந்த ரூபத்தில் வந்­தாலும் அனைத்­திற்கும் முகம் கொடுப்­ப­தற்கு தயா­ரா­கவே உள்ளேன்.

சமூக மற்றும் அர­சியல் சக்­தி­களை எந்­த­ள­விற்கு ஒன்­றி­ணைக்க முடி­யுமோ அந்­த­ள­விற்கு ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு தேவை­யான சமூக பொரு­ளா­தார மற்றும் அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்திக் கொடுக்க அர்ப்­ப­ணிப்­புடன் செயல்­ப­டுவேன்.

ஐ.தே.க.வுடன் தனிப்­பட்ட ரீதியில் எந்த வித­மான உடன்­ப­டிக்­கை­யொன்­றையும் கையெ­ழுத்­தி­ட­வில்லை. அன்­றைய ஆட்­சி­யி­லி­ருந்து வெளி­யே­றியபின்­னர் 49 அமைப்­புக்­க­ளுடன் நாட்­டுக்­கா­கவும் மக்­க­ளுக்­கா­கவும் மட்­டுமே இணக்­கப்­பா­டு­களை ஏற்­ப­டுத்திக் கொண்டேன். நாட்டின் எந்­த­வொரு பிர­தே­சத்­தி­லி­ருந்தும் பிர­தமர் ஒருவர் உரு­வா­கலாம். அதற்கு தடை­யில்லை.

நல்ல திட்­டங்­களும் அதற்­கான மனப்­பக்­கு­வமும் நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் எதிர்­கா­லத்­திற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயல்­படும் மனப் பக்­கு­வமே அதற்­கு அவ­சி­ய­மா­ன­தாகும்.

மோதல்­களை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் அர­சி­ய­லுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். புதி­ய­தொரு அர­சியல் கலா­சா­ரத்­திற்குள் அனைத்து கல்­வி­மான்கள், நிபு­ணர்­களை ஒன்­றி­ணைத்துக் கொண்டு மக்­க­ளி­னதும் நாட்­டி­னதும் நல­னுக்­காக உழைக்கும் அர்ப்­ப­ணிப்பே அவ­சி­ய­மாகும் அது எங்கள் அனை­வ­ரி­னதும் கடப்­பா­டாகும் என்­றார்.

இக்­கூட்­டத்தில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர, பிரதியமைச்சர் சாந்த பண்டார ஆகியோரும் உரையாற்றினார்கள். இதில் பிரதியமைச்சர்களான ஜயரத்ன ஹேரத், எரிக் வீரவர்தன உட்பட்ட தம்பதெனிய தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகெண்டனர்.