கோல்டன் கீயில் வைப்புச் செய்தவர்களின் பணத்தை மீளளிக்க அரசாங்கம் தீர்மானம்
கோல்டன் கீ நிறுவனத்தில் வைப்புச் செய்தவர்களின் பணத்தில் ஒரு பகுதியை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதன்படி வைப்பிலிடப்பட்ட பணத்தில் 41 வீதத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு நேற்று அமைச்சரவையின் அனுமதி கிட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோல்டன் கீ நிறுவனத்தில் பணத்தை வைப்புச் செய்த வைப்பாளர்களின் அடிப்படை மனித உரிமை மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே சட்டமா அதிபர் குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிவித்தார். அத்துடன் விடயங்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம் மீண்டும் இந்த வழக்கை எதிர்வரும் 25ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்துள்ளது.








