Breaking News

வல்லையில் பாரிய விபத்து! தளத்தில் ஒருவர் சாவு

வல்லைப் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் சாவடைந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து வல்லை நோக்கி அதிவேகத்தில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஒரத்தில் இருந்த பூச்சாடியை மோதித் தள்ளி வீதியின் அருகில் இருந்த பனை மரத்துடனும் மோதி விபத்துக்குள்ளானது. 

இவ் விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்தவர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.

இதேவேளை குறித்த மோட்டர் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன் ஏனைய இருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி ஒருவர் மந்திகை வைத்தியசாலையிலும் மற்றவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.