Breaking News

சமஷ்டியை கூட்டமைப்பு கோரலாம்! ஒற்றையாட்சி என்ற எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை - ராஜித

இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி அடிப்­ப­டையில் தீர்வு அவ­சியம் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கோரலாம். ஆனால் ஒற்­றை­யாட்­சியின் அடிப்ப­டையில் அதி­காரப் பகிர்வை வழங்­கு­வதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். 

அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து நாங்கள் ஒரு­போதும் மாற மாட்டோம் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

ஒரு காலத்தில் சிங்­கள மக்கள் சமஷ்­டியை கேட்ட­போது தமிழ் மக்கள் அதனை எதிர்த்­த­துடன் ஒற்றை­யாட்­சியை விரும்­பினர். தற்­போது தமிழ் மக் கள் சமஷ்­டியை கேட்­கும்­போது அதனை சிங்­கள மக்கள் எதிர்க்­கின்­றனர். ஆனால் இந்த நாட்­டுக்கு சமஷ்டி பொருத்­த­மா­னது என்று முதன் முதலில் முன்னாள் தலைவர் பண்­டா­ர­நா­யக்­கவே முன்­மொ­ழிந்தார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பு இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வைக் கோரலாம். அவர்கள் நீண்­ட­கா­ல­மாக அத­னையே கோரி­வ­ரு­கின்­றனர். 

ஆனால் அதனை நாங்கள் ஏற்­க­வில்லை. ஒற்­றை­யாட்­சியின் அடிப்­ப­டையில் அதி­ காரப் பகிர்வை வழங்­கு­வதே அர­சாங்­கத்தின் நிலைப்­பா­டாகும். அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து நாங்கள் ஒரு­போதும் மாற­மாட்டோம்.தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் ஆரம்­பத்­தி­லி­ருந்தே இத­னை­தான கோரி­வ­ரு­கின்­றனர். அவர் கள் அதற்­கா­கவே சமஷ்டிக் கட்­சி­யையே ஆரம்­பித்­தார்கள். எனவே அவர்கள் தேர்தல் காலத்தில் எத­னையும் கோரலாம். அதி­க­மாக கேட்­டால்தான் குறைந்த பட்­ச­மா­வது கிடைக்கும் என்று கூட்­ட­மைப்­புக்கு நன்­றாக தெரியும். அத­னால்தான் அவ்­வாறு கோரு­கின்­றனர்.

இன்று சமஷ்டி என்றால் சிங்­கள மக்கள் அச்­சப்­ப­டு­கின்­றனர். ஒரு காலத்தில் சிங்­கள மக்கள் சமஷ்­டியை கேட்­ட­போது தமிழ் மக்கள் அதனை எதிர்த்­த­துடன் ஒற்­றை­யாட்­சியை விரும்­பினர். தற்­போது தமிழ் மக்கள் சமஷ்­டியை கேட்­கும்­போது அதனை சிங்­கள மக்கள் எதிர்க்­கின்­றனர். ஆனால் இந்த நாட்­டுக்கு சமஷ்டி பொருத்­த­மா­னது என்று முதன் முதலில் முன்னாள் தலைவர் பண்­டா­ர­நா­யக்­கவே முன்­மொ­ழிந்தார். அவர் 1953 ஆம் ஆண்டே இந்த யோச­னையை முன்­வைத்தார். அத்­துடன் டொனமூர் யாப்பு காலத்­தி­லி­ருந்தே இந்த சமஷ்டி குறித்து பேசப்­பட்டு வந்­துள்­ளது.

இதே­வேளை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சி­ய­ல­மை­பபின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்­குள்­ளேயே தனது விஞ்­ஞா­ப­னத்தை முன்­வைத்­துள்­ளது. அவர்­களின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் இந்த விட­யமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் அவர்கள் 13 ஆவது திருத்தச் சட்­டத்­துக்கு கடந்த அர­சாங்­கத்தில் என்ன செய்ய முய்­சித்­தனர் என்று அனை­வ­ருக்கும் தெரியும். 13 பிளஸ் கடந்த அர­சாங்­கத்தில் மஹிந்த ராஜ­பக்ஷ கூறும்­போது அவர்கள் என்ன செய்­யப்­போ­கின்­றனர் என்று எனக்கு தெரிந்­து­விட்­டது.

அத­னால்தான் 13 ஆவது திருத்­தத்­துக்கு பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டும் தேவை­யில்லை என்று நான் வலி­யு­றுத்­தினேன். காரணம் அவர்­க­ளுக்கு பிளஸும் தெரி­யாது. மைனஸும் தெரி­யாது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கைவைத்தால் அரசாங்கத்தை விட்டு விலகிவிடுவேன் என்று கடந்த அரசாங்கத்தில் நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். அதனால்தான் அவர்கள் அந்த செயற்பாட்டை கைவிட்டனர். அந்தவகையில் கடந்த அரசாங்க காலத்தில் நாங்கள் வெற்றிபெற்றதாகவே கருதுகின்றோம் என்றார்.