Breaking News

யேர்மனியில் நடைபெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவு நாள் (படங்கள் இணைப்பு)

துயரம் தோய்ந்த நம் ஈழத்தமிழினம் தன் வரலாற்றில் யூலை 83 இற்கு முன்னும் பின்னும் எத்தனையோ ஆயிரம் கோர இறப்புக்களை, சொத்துடமை இழப்புக்களைச் சந்தித்திருக்கின்றது, 

சந்தித்து வருகின்றது. சொல்லப் போனால் யூலை 83 இனை ஒவ்வொரு நாளும் நம் தமிழர் தாயகம் சந்தித்து வரும் வேதனை முடிவிலாத் தொடர்கதை.

கறுப்பு யூலை என்னும் இந்தக் கோரத்தினை மீள் நினைக்கவும், நம் தமிழினத்தின் அவலம் இன்னும் முடியவில்லை என உணர்த்தவும் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இனத்தின் மீது நடைபெறும் இன அழிப்பை சர்வதேச மக்களிடம் எடுத்துச்சொல்லும் முகமாக யேர்மனில் பல நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

இவ் நிகழ்வுகளில் காலம் காலமாக ஈழத்தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தமிழின அழிப்பை வெளிப்படுத்தும் முகமாக பதாதைகளை தாங்கியவாறும் துண்டுப்பிரசுரம் கொடுத்ததும் இளையோர்களால் சிறப்பாக வேற்றின மக்களுக்கான விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.