Breaking News

ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் மாற்றம் தேவை - தமிழீழ மக்கள் பேரவை

நாம் பழைய அரசியல்வாதிகள் போல் மக்களை அணுகக்கூடாது நாம் மக்களை வித்தியாசமாக அணுகவேண்டும்: மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும் பொய்யான நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை நாம் மக்களுக்கு வழங்கக்கூடாது. 

நாம் எதற்காகப் போராடுகின்றோம். எந்தக் கொள்கையின் அடிப்படையில் போராடுகிறோம் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன- என்பதையெல்லாம் நாம் மக்களுக்கு எடுத்து விளக்கவேண்டும். உண்மை நிலையை எடுத்து விளக்கும் பொழுதுதான் மக்கள் எம்மீது நம்பிக்கை கொள்வார்கள்.- தமிழீழ தேசியத் தலைவர்: மேதகு வே.பிரபாகரன் தாயகத்தில் தேர்தல் கள பிரசாரங்கள் உச்ச கட்ட நிலையை அடைந்து இருக்கும் நிலையில் இன்றும் சிலர் மக்களிடையே யாருக்கு வாக்களிப்பது என்பதில் ஒரு குழப்பநிலை இருப்பது போல் இருக்கிறது. 

அந்த அடிப்படையில் அனைத்துலக ஈழத் தமிழர் அவையில் அங்கத்துவ நாடாகிய நாம் இந்த தேர்தல் பற்றி ஒரு தெளிவான சிந்தனையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ் மக்கள் அனைவரும் பெரும் திரளாக வாக்களிக்கும் படி கேட்டிருந்தோம். 

தேர்தல் என்று வரும் போது- தேர்தல் மேடைகளில் பேசும் பேச்சாளர்கள் வெற்றுமுழக்கங்களாக - மக்களிடம் நாளை விடுதலை வந்து விடும் போன்ற வீர வசனங்களை பேசுகிறார்கள் - அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 2013 செப்ர்ம்பர் வட மாகாண சபையின் தேர்தலின் போது - அழிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை மீண்டும் கட்டுவோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள் - தமிழ் தேசம் உருவாகி விட்டது என்று எல்லாம் பேசினார்கள். 

ஆனால் வட மாகாணசபை இனப்படுகொலைக்கான தீர்மானத்தை முன் வைத்து அதை நிறைவேற்றிய போது - தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாராளுமன்றக் குழுவினால் அந்த தீர்மானத்தை வலியுறுத்தாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கை வகுப்பாளர் போல் இருக்கும் சுமந்திரன் அவர்கள் அந்த தீர்மானத்தை வன்மையாக கண்டித்தார். 

தமிழ் மக்கள் 1948 யில் இருந்து சிறி லங்காவில் அழிக்கப்பட்டு வரும் இனம் என்பதை உலகத்தில் வாழும் அனைத்து,, தமிழ் மக்களும் மனித நேய அமைப்புகளும் கூற, தமிழ் மக்களை பிரதிநிதித்துவ படுத்துகிறோம்- தேசியத் தலைவர் உருவாக்கிய கட்சி என்று மேடைகளில் பேசும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் இனம் அழிக்கப்படுகிறது என்பதைக்கூட கூற முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்றால் - அடுத்து நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வியை நாம் கேட்டேயாகவேண்டும். 

போரின் முடிவின் போது சிறிலங்கா அரசின் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவும் தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்க வேண்டியவரை- ஜனாதிபதி மைத்திரியை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன் 2016ஆம் ஆண்டு எமக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் யுத்தம்முடிவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் பிரிவினையை யாரும் கோரவில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்து வருகின்றார். 

இதே தமிழ் தேசியக்கூட்டமைபினர் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில்- தமிழின அழிப்புக்கு முக்கிய காரணமாக இருந்த சரத் பொன்சேகாவுடன் கை கோர்த்தனர் என்பது இங்கே மீண்டும் குறிப்பிடப்பட்டே ஆக வேண்டும். 

அடுத்து வரும் அரசாங்கத்துடன் அனைத்துலக ஆதரவோடு எமது பிரச்சினைக்கு முடிவு கிடைக்கும் என்று கூறி வருகின்றார் மாவை சேனாதிராஜா ஆனால் பேரின வாதிகளோ சமஸ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை - ஒரு நாடு - ஒரு தேசியம் என்று கூறிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது - ஆட்சி மாற்றத்துக்காக தமிழ் வாக்குகளை சிங்கள தேசியத்க்கு அளித்த தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு - தமிழ் தேசியத்தை காக்குமா என்ற கேள்வி எம்மிடையே எழுகிறது. 

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கே வாக்களியுங்கள் என்று கருணா அறிக்கை விட்டிருப்பதும் கர்சனையோடு நோக்கத்தக்கது?! உள்ளக விசாரணைப் பொறிமுறையினை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்றும் சனல் 4 இல் வெளியான தகவல் என்பது கசிந்த ஆவணமோ அல்லது புனையப்பட்டதோ அல்ல என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் கூறி இருக்கின்றார். 

இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறும் போது அதே கட்சியில் இருக்கும் சுமந்திரன் கூறுகிறார் அனைத்துலக விசாரணை முடிந்து விட்டது - இனி உள்ளக விசாரணை தான் - நான் சிறி லங்காவின் பிரஜை, ஆகவே எனது நாட்டுக்கு எதிராக எந்தவித விசாரணையும் கொண்டுவர விட மாட்டேன் என்று கூறுகிறார். தமிழின படுகொலை செய்த சிறி லங்கா அரசினை பாதுகாப்பதற்கு சுமந்திரன் எவ்வளவு தீவிரமாகச் செயல்படுகின்றார் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ளமுடியும். 

எங்களால் என்ன செய்ய முடியும் என கேட்கிறார்கள். நாங்கள் இதுவரை செய்தவற்றை சொல்லிக்காட்டுவதில்லை.- என்று ஸ்ரீதரன் கூறுகிறார். தமிழ் மக்களின் விடுதலைக்கும் நல்வாழ்வுக்கும் நல்லது செய்தால் அது மக்களுக்கு தெரிந்து இருக்கும். ஆனால் சொல்லிக்காட்ட விரும்பவில்லை என்பது மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் மேடை பேச்சா என்ற கேள்வி தான் எழுகிறது. 

மேலே குறிப்பிட்டவை யாவும் தமிழ்த். தேசியக்கூட்டமைப்பின் பிரதிநிதிகளால் பேசப்பட்டவை - ஒவ்வொரு பிரதிநிதியும் தமது சிந்தனைக்கு ஏற்றவாறு முரண்பாடான கருத்துக்களை - ஒரே கட்சியின் கருத்தாக முன் வைக்க இவர்களால் முடியவில்லை – தமிழ்த் தேசியக்கூடமைப்ப்பு என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் நலன் கருதி அவர்களால் ஒற்றுமையான தீர்மானத்தை முன் வைக்க முடியாதவர்கள் தமிழ் மக்களுக்கு எவ்வாறு விடுதலையை தேடிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதை நாம் கேட்டுக்கொள்ளவேண்டும். 

இத்துடன் ஒரு விடயத்தை நாம் இங்கே கூறியே ஆகவேண்டும் - தமிழர்கள் தன்மானத்துடன் வாழ்ந்த பாரம்பரியம் மிக்க ஓர் இனம் - எமது தமிழ் இனத்துக்கு விடுதலைப் போராட்டத்தில் ஒரு நீண்ட உன்னத வரலாறு 2000 மேற்பட்ட ஆண்டுகளாக இருக்கிறது - இந்த தன்மானத்திற்கு தலை குனிவை ஏற்படுத்திய சம்பவம் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்தது - மேடையில் 2009 இனப்படுகொலைக்கு இன்னொரு சூத்திரதாரியாக இருந்த ரணில் விக்கிரமசிங்க மேடையில் இருக்க - இடது புறத்தில் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவும் - வலது புறத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வகுப்பாளர் சுமந்திரனும் இருக்க ஒரு வயோதிப தமிழ் தாய் ரணில் காலில் விழுந்து அழுகிறார் - ஆனால் இந்த தன்மானம் மிக்க தமிழ் தலைவர்கள் வானத்தை பார்த்துகொண்டு இருந்தார்கள் -சிங்கள இனவாத் அரசு தலைவர்களின் கால்களில் தமிழர்களை விழச் செய்தது தான் இவர்களது மகத்தான சாதனை. சிங்க கொடி ஏந்திய வீரச் செம்மல்களும் இவர்கள் தான். 

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிதுவதில் பாரிய மாற்றம் தேவை என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கூறும் தேர்தல் கால வாக்குறுதிகளை அவர்கள் ஒரு போதும் நடைமுறைப்படுதப்போவதில்லை என்பதை பல தேர்தல்களில் பார்த்துச் சலித்து விட்டது. 

தேர்தலுக்கு பின் இவர்கள் வாக்குறுதிகள் காற்றில் பறப்பவையாகத்தான் இதுவரை காலமும் இருந்திருக்கிறது, அத்துடன் சர்வதேச அரசுகளுடன் சர்வதேச நலன்களுக்கு முன்னால் - தமிழர் நலன்களை வைத்து பேரம் பேசும் வலுவும் நோக்கமும் இவர்களிடம் இல்லை என்பதை இந்த 6 வருட கால அனுபவத்தின் மூலம் நாம் காண்கிறோம். 

அதே நேரத்தில் இன்றைய எமது தேவை என்ன ? - இனப்படுகொலைக்கான ஆதாரங்களுடன் ஒரு பிரேரணை வட மாகாண சபை முன் வைத்திருக்கிறது - அத்துடன் சேர்ந்து நாம் இலட்சிய வேட்கையோடு விடுதலையின் பாதையில் முன்னேறிக்கொண்டே வந்தவர்கள் - அதனை வட்டுகோட்டை தீர்மானம் - திம்பு தீர்மானம் - விடுதலை போராட்டம் - சமாதான பேச்சு வார்த்தையின் போது முன் வைக்கப்பட்ட இடைகால அரசு தீர்மானம் (ISGA ) - போரின் முடிவு - வட மாகாணசபையின் இனப்படுகொலைக்கான தீர்மானம் - தமிழ் நாட்டு அரசின் சர்வஜன வாக்கடுப்புக்கான தீர்மானம் என்பவை எடுத்து இயம்புகின்றன. - ஈழத் தமிழரின் விடுதலையில் இன்று 12 கோடி தமிழர்கள் கைகோர்த்து நிற்கும் சூழலில் - இந்த போராட்டத்தை முன்னகர்த்த தாயகத்தில் எமக்கு ஒரு தீர்க்கமான அரசியல் மாற்றம் தேவை. 

இந்த அரசியல் மாற்றத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்தோமானால் இந்த தேர்தலின் தொடர்ச்சி மக்களின் விடுதலைக்கு வழி அமைக்கும் என்ற நம்பிகையை அளிக்கிறது. 

பாராளுமன்ற கதிரைகளை தக்க வைப்பதற்காக பலர் கடந்த காலங்களிலும் தற்போதும் முயற்சிக்கிறார்கள் - ஆனால் இந்த பாராளுமன்ற கதிரைகள் அவரவர் சுயலாபம் ஈடுவதற்க்காக மக்கள் வாக்களிக்கவில்லை – இந்தத் தேர்தல் தமிழருக்கு சரியான மாற்றத்துக்கான கதவுகளை திறந்து விட வேண்டும். 

இதுவரை காலமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற தனிக்கட்சியின் கையில் தமிழர்களின் உரிமைகளை ஒப்படைத்து - சிங்கள அரசுகளிடம் கையேந்துபவர்களாக மாற்றப்பட்டு விட்டோம் - அதை மாற்றி எமக்கு வேண்டிய உரிமையை பெறவேண்டிய காலம் இப்போது. அதற்கான மாற்றத்தை உருவாக்கி விடவேண்டியவர்கள் நாம். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களை தேர்தலில் வெற்றி பெறச் செய்வோம்.

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு