Breaking News

ஐ.நா. மேற்பார்வையோடு இடம்பெறும் உள்ளக விசாரணையை ஏற்க முடியாது - சிவா­ஜி­

தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட கொடு­மை­க­ளுக்கு நீதியும் நிரந்­தர தீர்வும் கிடைக்­க­வேண்­டு­மெனத் தெரி­வித்த குரு­நாகல் மாவட்­டத்தில் சுயேச்­சை­யாகப் போட்­டி­யிடும் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஐ.நா. சபை, சர்­வ­தேச கண்­கா­ணிப்­புக்­குழு மேற்­பார்­வையில் இடம்­பெறும் உள்­ளக விசா­ர­ணையை ஒரு­போதும் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யா­தெனத் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் ஆணை­யா­ள­ருக்கு தாம் அனுப்பி வைத்­துள்ள கடிதம் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்கும் ஊடக சந்­திப்­பி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் தெரி­விக்­கையில்,

தமிழ்த் தேசிய இனம், சிங்­கள பெரும்­பான்மை இனத்தால் திட்­ட­மிட்டு அழிக்­கப்­பட்டு வரு­கின்­றது. சுதந்­திர நாள் முதல் தமி­ழ­ருக்கு எதி­ரான இனப் படு­கொ­லைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. உரி­மைகள் பறிக்­கப்­பட்டு நிலங்கள் பறிக்­கப்­பட்டு அவர்கள் மீது ஆக்­கி­ர­மிப்பும் அடக்கு முறையும் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்­துள்­ளது. இவ்­வாறு தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்டு வந்த சரித்­திர ரீதி­யான தவ­று­க­ளுக்கு அர்த்­த­முள்ள ஒரு பெறு­பேறு கிடைக்­க­வேண்டும்.

மேலும் நீதி விசா­ரணை ஒன்றைத் தவிர வேறொன்­றையும் நாங்கள் ஏற்­கப்­போ­வ­தில்லை. அத்­தோடு OISL அறிக்­கை­யா­னது சர்­வ­தேச நிதி விசா­ரணை ஒன்றை நோக்கி எடுத்துச் செல்­லப்­பட­வேண்டும்.உள்­ளக விசா­ர­ணையை நாங்கள் ஒரு­போதும் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது. அது ஐ.நா.வின் மேற்­பார்­வை­யோடு சர்வ­தே­சத்தின் கண்­காணிப்பு என்­றாலும் அதனை நாம் ஏற்றுக் கொள்­ள­மு­டி­யாது.

அத்­தோடு தமிழ் மக்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு ஓர் நிரந்­த­ர­மான அர்த்­த­முள்ள அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்கு ஐ.நா. நடவ­டிக்கை எடுக்­க­வேண்டும். இலங்கை தொடர்­பான நீதி விசா­ர­ணைகள் ஐ.நா.வின் கட்­டுப்­பாட்டில் சர்­வ­தேச தரத்­திலே குற்­ற­வியல் நீதி­மன்­றத்தால் அல்­லது விசேட தீர்ப்­பாயம் ஒன்றின் மூலம் ஒரு தீர்க்­க­மான முடிவு எட்­டப்­ப­ட­வேண்டும்.

இலங்கை அர­சாங்கம் மீண்­டு­மொ­ரு­முறை தமிழ் மக்கள் மீது வன்­மு­றையை இன­வ­ழிப்பைக் கட்­ட­விழ்த்து விடு­மாயின் அவர்­களைச் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் நிறுத்­து­வ­தற்கு வசதியாக இலங்கையரசு றோம் உடன்படிக்கையில் கையெழுத்திடவேண்டும். அதற்கு சர்வதேசமும் இலங்கையை வலியுறுத்தவேண்டும். போன்ற விடயங்களை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.