தந்தை இறந்துவிட்டார் வாக்களிக்க வேண்டாம் - பிரசன்ன
தந்தை இறந்து விட்டார் எனக் கூறிய தரப்பிற்கு வாக்களிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களிடம் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுத்த தந்தை இறந்து விட்டார் குழுவிற்கு வாக்களிக்க வேண்டாம் என அவர் கோரியுள்ளார். மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டும் என கூறிய தரப்பினரையே எதிர்வரும் 17ம் திகதி நாடாளுமன்றம் அனுப்பி வைக்க வேண்டும்.
மினுவன்கொட பட்டபொத்த பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை பலவந்தமான முறையில் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தரப்பிற்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.








