Breaking News

13க்கு அப்பால் தமிழர்களுக்கு எதையும் கொடுக்கமாட்டோம் – சுசில்

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் எதையும் கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்த.

13பிளஸ் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தெரிவாக இல்லை என்பதால், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக, 13பிளஸ்ஐ நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இனப்பிரச்சினைக்கான தீர்வாக, 13வது திருத்தச்சட்டத்துக்குள் அமையும் எந்த தீர்வையுமே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்றுக்கொள்ளும்.

சம்பந்தனின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தான் இனப்பிரச்சினை பற்றி பேசுகிறது. அவர்கள் வடக்கு, கிழக்கை இணைத்து சுயாட்சி கோருகின்றனர். அதனை அனுமதிக்க முடியாது. 13க்கு அப்பால் எதையும் கொடுப்பதற்கு நாம் தயாராக இல்லை. மாகாணசபைகளையும், உள்ளூராட்சிசபைகளையும் வலுப்படுத்துவதே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திட்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.