பாகுபலி-2 படத்தின் தலைப்பு மாற்றம்?
டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த சரித்திர திரைப்படமான பாகுபலி உலகம் முழுவதும் இது வரை ரூ.450 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.
பிரபாஸ், ரானா, தமன்னா, அனுஷ்கா ஆகியோரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக வெளிவந்த பாகுபலி படம் ஹிந்தி மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.
பாகுபலி தி பிகினிங்க் என பெயரிடப்பட்ட அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பாகுபலி தி கன்குலூசன் என பெயரிடபடுள்ளதாகக் கூறப்பட்டது.
ஆனால் தற்போது பாகுபலி 2 படத்தின் இரண்டாம் பாகத்திற்கு மகாபலி என புதிய தலைப்பு பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. செப்டம்பர் மாதம் முதல் பாகுபலி 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என தெரிகிறது. இப்படத்தின் நாயகன் பிரபாஸ் பாகுபலி 2 படத்திற்காக தாடி வளர்த்து வருகின்றாராம்.