Breaking News

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னிலையில்(யாழில் நகைச்சுவை)


வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
முன்னணி வகிக்கின்றது. 1 ஆசனத்தையேனும் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி படுதோல்வி அடைந்துள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி வடமாகாணத்தில் 10 ஆசனங்களையும் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் இன்னும் சில முடிவுகள் வெளியாகாத நிலையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 ஆசனம் யாழ்ப்பாணத்தில் கிடைத்துள்ளது.

அநேகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மேலதிக 1 போனஸ் ஆசனத்துடன் 15 ஆசனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வெற்றி பெற்றவர்களின் பெயர் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த தேர்தலில் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவுசெய்யப்படுவதால் வடமாகாணசபைக்கு புதிதாக ஒருவர் வருவதற்கு வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது என்பது இங்கு நோக்கத்தக்கது.

இதுவரை யாழில் நடைபெற்ற நகைச்சுவை விடயங்கள்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களின் விருப்புவாக்கு விபரங்கள் குறித்த உள்ளகத் தகவல்களின் கிடைத்திருந்தன.

1. சிவஞானம் சிறிதரன்
2.மாவை சேனாதிராஜா
3.தர்மலிங்கம் சித்தார்த்தன்
4.க.அருந்தவபாலன்
5.ஏபிரகாம் சுமந்திரன்

ஆகியோரும் ஆறாவது ஆசனம் ஈபிடிபியினருக்கும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ள நிலையில் ஏழாவது ஆசனத்தினை கூட்டமைப்பு பெற்றுக்கொள்வதற்கு சராசரியாக ஆறு அல்லது அதனை அண்மித்த எண்ணிக்கையுடைய வாக்குக்கள் போதாது என்ற நிலையில் ஏழாவது ஆசனத்தினைப் பெறும் வகையில் மீள் வாக்கெண்ணும் நடவடிக்கைக்காக கூட்டமைப்பு கோரிக்கை முன்வைக்கும் வாய்ப்புள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னர்தான் நிலைமை தலைகீழாக மாறியது

சாதனை மேல் சாதனை, அருந்தவபாலன் வெளியே - சரவணபவன் உள்ளே, 2 ஆவதாக இருந்த சித்தார்த்தன் நான்காவதானார், 5 ஆவதாக இருந்த சுமந்திரன் 3 ஆவதாகினார். மீள எண்ணினார்களாம். மக்கள் ஆணையும் சனநாயகமும் எப்படி பணபலம் கொண்டு மாற்றலாம் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்.

தற்போதுவரை இறுதி நிலை(எவரும் செல்வாக்கு செலுத்தாதவரை இம்முடிவு நடைமுறையில் இருக்கும்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெற்றோர் விபரம்.

1. திரு. சிவஞானம் சிறீதரன் – 72058
2. திரு. மாவை சேனாதிராசா – 58782
3. திரு. மதியாபரணம் சுமந்திரன் – 58043
4. திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் – 53740
5. திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் – 43289