விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் பிரபுதேவா!
பிரபுதேவா-விஜய் கூட்டணியில் ‘போக்கிரி’, ‘வில்லு’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ‘போக்கிரி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது.
இதையடுத்து, பாலிவுட் பக்கம் திரும்பிய பிரபுதேவா, 2 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் ‘வெடி’, ‘எங்கேயும் காதல்’ ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்களும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை.
இதனால், பாலிவுட் பக்கம் தனது முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார். பாலிவுட்டில் இவர் இயக்கிய பல படங்கள் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தன.
இந்நிலையில், விஜய்யை வைத்து தமிழில் இரண்டு படங்களை இயக்கிய பிரபுதேவா, மீண்டும் விஜய்யுடன் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதற்கு பிரபுதேவாவே பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, விஜய்யை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரபுதேவா சமீபத்தில்தான் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.








