Breaking News

முவுக்கு வந்தது தேர்தல் பிரசாரம்

எதிர்வரும் திங்கட்கிழமை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரங்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தி ருக்கின்றன.


நாடாளுமன்ற தேர்தல் சட்டவிதிகளின்படி தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்பாக அனைத்து பிரசாரங்களும் நிறுத்தப்படவேண்டும்.தேர்தல் திணைக்களத்தின் அறிவுத்தலின்படி ஒரு மாவட்டத்தில் ஒரு பிரதான கட்சி அல்லது சுயேச்சைக் குழு தமது இறுதிக் கூட்டங்களை நடத்த முடியும் என்ற அறிவிப்புப்பு அமைய நேற்று பரவலாகத் தேர்தல் கூட்டங்கள் இடம்பெற்றன.

இதேவேளை கடந்த மூன்று நாட்களாக அமைதியான முறையில் அரசியல் கட்சிகளும் ஆதரவாளர்களும் தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுவதை தங்கள் அவதானிக்க முடிவதாக உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கஃபே கூறுகின்றது.

இருப்பினும் தேர்தல் தினத்தில் வன்முறைகள் அல்லது விதிமீறல்கள் இடம் பெறக்கூடும் என்று அடையாளம் காணப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை, புத்தளம், வவுனியா , மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த உத்தேசித்திருப்பதாக அந்த அமைப்பின் தேசிய அமைப்பாளரான அஹமட் மனாஸ் மக்கீன் கூறுகின்றார்.

இந்த பகுதிகளில் கூடுதல் காவல்துறையினரை பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.