ரணில் மற்றுமொரு சாதனை!
இம்முறை தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானதன்மூலம் 1977ஆம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
1977ஆம் ஆண்டு தொகுதிவாரியான தேர்தல் முறையின் கீழ் இறுதியாக நடைபெற்றபோது நாடாளுமன்றத் தேர்தலில் பியகம தொகுதியில் 22,045 வாக்குகளைப் பெற்று முதன்முறையாக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
இதன்படி தொடர்ச்சியாக 38 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை ரணில் விக்ரமசிங்க பெற்றுள்ளார். நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரணில் விக்ரமசிங்க பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். அத்துடன், இம்முறை வெற்றிபெற்று பிரதமர் பதவியை வகிக்கவுள்ளார்.
மகிந்த ராஜபக்ச
இதேவேளை, 1970 ஆண்டும் நடைபெற்ற தேர்தலில் பெலியத்த தேர்தல் தொகுதியில் முதன்முறையாக வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவான மகிந்த ராஜபக்ச 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார்.
அதன்பின்னர் 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் பெலியத்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டிய மகிந்த ராஜபக்ச 2005ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்தார்.
இரண்டு முறை ஜனாதிபதி பதவிக்குத் தெரிவான மகிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்தது பின்னர் கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானதும் அனைவரும் அறிந்ததே.








