பாங்கொக் தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்
தாய்லாதுந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள வழிபாட்டுத்தலத்திர் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மன்னர் பும்போல் அதுல்யாடெப்பிற்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். தாய்லாந்து மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.








