Breaking News

சிங்கப்பூரில் நடிகர் அதர்வாவின் சண்டி வீரன் படத்திற்கு தடை!

அதர்வா நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ‘சண்டி வீரன்’. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். சற்குணம் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படம் நேற்று உலகெங்கும் வெளியானது. வெளியானது முதல் நல்ல விமர்சனமும் மக்களிடையே வரவேற்பும் பெற்று வரும் ‘சண்டி வீரன்’ படத்திற்கு சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘சண்டி வீரன்’ படத்தை பார்வையிட்ட சிங்கப்பூர் தணிக்கை குழுவினர், சிங்கப்பூர் காவல் துறையினரால் நிறைவேற்றப்படும் தண்டனையான “ரோத்தா” என்னும் தண்டனை படத்தில் காண்பிக்கப்படுவதால் படம் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது