Breaking News

காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அமர்வுகள் நாளை

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடு களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மூன்றாம் கட்ட அமர்வுகள் நாளை முன்னெடுக்கப்படவுள்ளன.


மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை சனிக்கிழமை 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய நாளையும், நாளை மறுதினமான 23 ஆம் திகதியும் மண்முனை தென்எருவில்பற்று மற்றும் எருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் மற்றும் 25 ஆம் திகதிகளில் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.