Breaking News

தேசிய அரசிற்கு செல்லவேண்டாம் - கூட்டமைப்பிடம் சிவாஜி வேண்டுகோள்!

தேசிய அரசினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பங்கெடுக்க கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமாகாணசபை உறுப்பினருமான கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தினில் நேற்று  வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் இது பற்றி அவர் விபரிக்கையினில் வெளியிலிருந்து தேசிய அரசிற்கு ஆதரவளிப்பதென்றால் கூட அது ஒவ்வொரு விடயத்திற்குமான ஆதரவாகவே இருக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தேசிய அரசிற்கு ஆதரவளிப்பதென்ற விடயம் தொடர்பான முடிவெடுப்பதனை கூட சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு தானே செய்யுமென எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் தேர்தலிற்கு முன்னரும் சரி பின்னரும் சரி பங்காளிக்கட்சிகள் ஒன்றித்து எடுக்கும் முடிவே அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதே நிலைப்பாடாகும். அவ்வகையினில் தேசிய அரசில் இணைவது தொடர்பான முடிவினை கூட அனைத்து கட்சிகளதும் ஆலாசனையின் பேரினில் முன்னெடுக்க வேண்டும்.

வெளியிலிருந்து விடயங்கள் தொடர்பினில் அளிக்கப்படும் ஆதரவு தொடர்பில் கூட அனைத்து பங்காளி தரப்புக்களதும் ஆலோசனைகளை பெற்றே முடிவு எடுக்கப்படவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

முன்னரும் தமிழ் தரப்புக்கள் தேசிய அரசினில் அங்கத்துவம் பெற்றிருந்தும் எதனையும் செய்துமுடித்திருக்கவில்லை.இதனை புரிந்து கொண்டு தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பு செயற்படவேண்டுமெனவும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.