வேட்பாளர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு!
பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் தேர்தல் ஆணையாளரிடம் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை மா அதிபருக்கு பணித்துள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடாந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.இந்த நிலையில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கான பாதுகாப்பு தொடர்ச்சியாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொட்டாஞ்சேனை புளுமென்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.