Breaking News

புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு!


புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் கரு ஜயசூரிய பெயரிடப்படவுள்ளதாக தெரியவருகிறது.

எனினும், இதுகுறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென ஐக்கிய தேசியக் கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்தல் பணிகளில் பாரிய பங்களிப்பைச் செய்த கரு ஜயசூரிய, இம்முறை தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.