மகிந்தவிற்கு எதிராக வழக்கு!
ஜனாதிபதி தேர்தல்காலத்தில் அரசியல் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்காக செலுத்த வேண்டிய 14 கோடி ரூபாயை கேட்டு கொழும்பு வர்த்தக நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கை குழுவைச்சேர்ந்த ஏழுபேருக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபையினரே இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் அநுர பிரயதர்ஷன யாப்பா, காமினி செனரத் மற்றும் அமல் சேனாதிலங்கார உள்ளிட்ட ஏழுபேரே இந்த வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.








