மைத்திரிக்கு ஆதரவு வழங்கக்கூடிய பிரதமரை நியமிக்க வேண்டும்: சந்திரிக்கா
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஆதரவாக செய்றபட கூடிய பிரதமரை நியமிப்பது எங்கள் அனைவரதும் கடமையாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பலங்கொடையில் இடம்பெற்ற மக்கள் சந்திபொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,
பொதுj; தேர்தலில் ஏதாவது ஒரு முறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகினால் நாடாளுமன்றம் மாத்திரமின்றி முழு நாடும் குழப்பமடைந்து விடும்.
ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் அன்று கருத்து மோதல் ஏற்பட்டன, எனினும் கட்சியை விட நாட்டை குறித்து சிந்தித்து ராஜபக்சவை தோல்வியடைய செய்யுமாறு நான் மக்களிடம் கேட்டு கொள்கின்றேன்.
நான் தோல்வியடைந்து வீட்டிற்கு செல்லவில்லை. எனினும் தோல்வியடைந்து சென்ற மஹிந்த பதவி பேராசையில் மீண்டும் அதிகாரத்தை கேட்டு கொண்டு வந்துள்ளார். கடந்த 10 வருடம் அதிகாரத்தில் இருந்து தனது குடும்ப உறுப்பினர்களுக்கு, உறவினர்களுக்கு சிறந்த பதவிகளை வழங்கி நாட்டை சீரழித்தார்.
பாதைகள் நிர்மாணிப்பதற்கு, விமான நிலையங்கள், துறைமுகங்கள் நிர்மாணிப்பதற்கு 100க்கு 9 ரூபாய் என்ற வட்டியில் பணம் பெற்றுகொண்டு அவற்றில் அதிகமானவைகளை தனது பைக்குள் போட்டு கொண்டார். நாங்கள் கடனுக்கு பணம் பெற்றோம் எனினும் 100க்கு 2 ரூபாய் என்ற குறைந்த வட்டியில்.
எங்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை துண்டு துண்டாக பிரித்தார் எனது தாய் மற்றும் தந்தை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அநேக உறுப்பினர்களை உருவாக்கினார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அழிவடைவதனை பார்த்து கொண்டிருக்க முடியாமையினாலே மாதுலுவாவே கோபித்த தேரருடன் சிவில் சமூகங்களை இணைத்து கொண்டு, கடந்த ஜனவரி மாதம் ராஜபக்சவை வீட்டிற்கு அனுப்பி வைத்தோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.








