Breaking News

பொறுப்­புக்­கூறும் வகையில் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அமைப்போம்! யாழ்ப்­பாணத்தில் ரணில்

யுத்­தத்­தின்­போது பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் வகையில் உண் மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

பொது­மக்­களின் காணி­களை மீள வழங்க நட­வ­டிக்கை எடுப்போம். காணா­மற்­போனோர் தொடர்­பிலும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அதற்கும் தீர்­வு­காண எமது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

யாழ்.மாவட்­டத்தில் போட்­டி­யிடும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று யாழ்.நகரில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே

பிர­தமர் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாறு தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்­பாளர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தலை­மையில் நடை­பெற்ற இந்தக் கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்­த­தா­வது,

எமது அர­சாங்கம் பத­வி­யேற்று 100 நாட்­க­ளுக்குள் பொருட்­களின் விலை­களை முழு­மை­யாக குறைத்­துள்­ளது. இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த நாம் நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். பொது­மக்­களின் காணி­களை மீள வழங்­கு­வ­தற்கு நாம் முன்­மு­யற்­சி­களை எடுத்­தி­ருக்­கின்றோம். வலி­காமம் வடக்குப் பகு­தியில் 1000 ஏக்கர் வரை­யி­லான காணி­களை நாம் பொது­மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்ளோம். 100 நாட்­க­ளுக்குள் நல்­லாட்­சியை நடத்­தி­யுள்ள நாம் 60 மாதங்­க­ளுக்கு ஆணையை கோரி நிற்­கின்றோம்.

பாரா­ளு­மன்­றத்தில் பெரும்­பான்­மையைக் கொண்ட ஆட்­சிக்கு ஆணை வழங்­கு­மாறு நான் உங்­க­ளிடம் கோரு­கின்றேன். ஆட்­சியில் பங்­கா­ளி­க­ளாக மாறி­னால்தான் அபி­வி­ருத்­தியை மேற்­கொள்ள முடியும். பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வைக் காண முடியும்.

செப்­ரெம்பர் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெ ளிவ­ர­வுள்­ளது. இந்த விட­யத்தில் நாம் பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்டை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ளது. யுத்த காலத்தில் காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பாக விசா­ர­ணையை முன்­னெ­டுத்து அந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் விசா­ரணை செய்து நீதி நிலை­நாட்டப் பட வேண்டும். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நட்­ட­ஈ­டு­களை வழங்க வேண்­டி­யுள்­ளது. உயி­ரி­ழப்­புக்கள் ஈடு­செய்ய முடி­யாத விட­ய­மாகும். ஆனாலும் நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டி­யுள்­ளது. இழைக்­கப்­பட்ட அநீ­திகள் தொடர்பில் பொறுப்­புக்­கூறும் வகையில் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­குழு அமைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் நடத்­தப்­படும்.

யுத்­தத்­தின்­போது இடம்­பெ­யர்ந்த சகல மக்­க­ளையும் மீளக்­கு­டி­யேற்ற வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் எடுப்போம். அதி­யுயர் பாது­காப்பு வலயப் பகு­தி­க­ளுக்குள் உள்ள பொது­மக்­களின் காணி­களை மீள­வ­ழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். தற்­போது வலி­காமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணி­களை மீள வழங்­கி­யுள்ளோம். பொது­மக்­களின் காணிகள் மீள வழங்­கப்­பட வேண்டும் என்று நான் படை­யி­ன­ருக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளேன்.

பாதிக்­கப்­பட்ட தமிழ், முஸ்லிம் மக்­களின் வாழ்­வா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு இந்­திய அர­சாங்கம் நிதி­யு­தவி வழங்க முன்­வந்­துள்­ளது. வலி­காமம் வடக்குப் பகு­தியில் மீள்­கு­யேற்­றப்­படும் மக்­க­ளுக்கு அடிப்­படை வச­தி­களை செய்­து­கொ­டுப்போம். மீனவர் துறை­முகம் ஒன்­றையும் நாம் யாழ்ப்­பா­ணத்தில் அமைக்­க­வுள்ளோம். யாழ்.குடா­நாட்டில் மிகப்­பெ­ரிய பிரச்­சி­னை­யாகக் காணப்­படும் குடிநீர்ப் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண்­ப­தற்கு தொழில்­நுட்ப விஞ்­ஞான ரீதியில் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்தை உலகத் தரம்­வாய்ந்த நிறு­வ­ன­மாக மாற்­று­வ­தற்கு நாம் செயற்­ப­டுவோம். தொழில்­நுட்ப ரீதியில் தொழில்­நுட்ப மைய­மாக குடா­நாட்டை மாற்­று­வ­தற்கும் குளங்­களைப் புன­ர­மைப்­ப­தற்கும் எமது அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்கும். அடுத்த ஐந்து வரு­டத்தில் 10 இலட்சம் இளைஞர், யுவ­தி­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்­க­வுள்ளோம். இதற்கு வெளி­நாட்டு முத­லீ­டு­களைப் பெறு­வ­தற்கு நாம் நட­வ­டிக்கை எடுப்போம்.

ஊர்­வாற்­றுறை உட்­பட தீவுப் பகு­தி­களை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கும் சுற்­று­லாத்­துறை மையங்­க­ளாக அவற்றை மாற்­று­வ­தற்கும் முத­லீட்­டா­ளர்­க­ளுடன் நாம் பேசி வரு­கின்றோம். முன்னாள் அமைச்சர் தியா­க­ராஜா மகேஸ்­வரன் படு­கொலை செய்­யப்­பட்ட பின்னர் மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் துணிந்து மக்கள் சேவைக்காக திருமதி விஜயகலா மகேஸ்வரன் அரசியலில் ஈடுபட்டார். துணிச்சலாகச் செயற்படும் அவரை இந்தத் தேர்தலில் நீங்கள் ஆதரித்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

பெண்ணுரிமை மற்றும் பெண்களின் நலன்கள் தொடர்பில் அவர் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இதற்காகவே அவருக்கு மகளிர் விவகார அமைச்சை வழங்கியிருந்தோம். நீங்கள் அவரை இம்முறையும் வெற்றிபெற வைக்க வேண்டும். புதிய அரசாங்கத்தில் அவருக்கு உரிய அமைச்சு வழங்கப்படும்.