மகிந்த மறியலுக்குச் செல்வார்! அசாத் சாலி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவர் நாடாளுமன்றம் செல்வதற்குப் பதிலாக மறியலுக்கு செல்வார் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்துடன், சாதாரண நாடாளுன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பும், சலுகைகளுமே மகிந்தவிற்கு வழங்கப்படும் என்றும், மாறாக முன்னாள் ஜனாதிபதி என்பதற்காக முன்னர் வழங்கப்பட்ட சலுகைகள் எதிர்காலத்திலும் வழங்கப்பட மாட்டதென்றும் அவர் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிலையில் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.








